ஜாலான் பார்லிமன், ஜனவரி 20 (பெர்னாமா) -- 2025ஆம் ஆண்டிற்கான அண்மைய மொத்த உள்நாட்டு உற்பத்தி ஜி.டி.பி 4.9 விழுக்காட்டு வளர்ச்சி விகிதத்தைப் பதிவு செய்துள்ளது.
இது அதிகாரப்பூர்வமாகக் கணிக்கப்பட்ட 4 முதல் 4.8 விழுக்காட்டைவிட அதிகமாகும்.
கடந்த ஐந்து ஆண்டுகளில் ரிங்கிட்டின் செயல்திறன் மிக சிறந்த அடைவுநிலையைப் பதிவுச் செய்ததாகவும் அமெரிக்க டாலருக்கு எதிராக நான்கு ரிங்கிட் ஐந்து சென்னை எட்டியிருப்பதாகப் பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் கூறினார்.
கடந்த ஏழு ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு மலேசிய பங்குச் சந்தையின் குறியீடு 1,700 புள்ளிகளை அதிகமாக எட்டியிருப்பதாக டத்தோ ஶ்ரீ அன்வார் கூறினார்.
மேலும், கடந்தாண்டு நவம்பரில் வேலையிண்மை விகிதம் 2.9 விழுக்காடாகக் குறைந்துள்ளது என்றும் இது கடந்த 11 ஆண்டுகளில் பதிவான மிக குறைந்த விகதம் என்றும் அவர் தெரிவித்தார்.
"பொது சேவைகள், வர்த்தகர்கள் மற்றும் முதலீட்டாளர்களின் கடின உழைப்புடன் சேர்ந்து. நாட்டின் திசையைப் பற்றி இருவரும் தெளிவாக உள்ளனர். தொழில்துறை திட்டம், இலக்கவியல் மாற்றம், ஆற்றல் மாற்றம் மற்றும் பிறவற்றைப் பற்றி அறிவிக்கப்பட்டது போல'' என்றார் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம்.
இதனிடையே அரசாங்கத்தின் அரசியல் உறுதிப்பாடும் சவாலான கொள்கை சீர்த்திருத்தங்களைச் செயல்படுத்துவதற்கான விருப்பமும் முதலீட்டாளர்களை நம்ப வைத்துள்ளதாக நிதி அமைச்சருமான அன்வார் கூறினார்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)