Ad Banner
 அரசியல்

வெற்றிப் பெற்ற இடங்களில் போட்டியிடும் கொள்கையைப் பாதுகாப்பதில் ஜ.செ.க உறுதி

18/01/2026 05:00 PM

கிள்ளான், 18 ஜனவரி (பெர்னாமா) -- எதிர்வரும் பொதுத் தேர்தலின் போது, முன்னதாக வெற்றிப் பெற்ற இடங்களில் போட்டியிடும் கொள்கையைப் பாதுகாக்கும் தனது நிலைப்பாட்டில் ஜனநாயக செயல்கட்சி, ஜ.செ.க உறுதியாக உள்ளது.

அரசியல் கூட்டணி உடனான ஒத்துழைப்பு, நியாயமாகவும் வெளிப்படையாகவும் மேற்கொள்ளப்படுவதை உறுதி செய்வதற்கு இக்கொள்கையை கட்சி நிலைநிறுத்தும் என்று ஜ.செ.க பொதுச் செயலாளர் அந்தோணி லோக் தெரிவித்தார். 

''கூட்டணியாக நாம் ஒத்துழைத்தால், பதவிக் கொள்கையின் அடிப்படையில் தொகுதிப் பங்கீடு இருக்க வேண்டும். கடந்த மாநிலத் தேர்தலில் நாங்கள் தியாகம் செய்துள்ளோம். நாங்கள் முன்பு வென்ற தொகுதியான டூசுன் துவாவை அம்னோவிடம் ஒப்படைத்துள்ளோம். எனவே இது எங்கள் தியாக உணர்வையும் காட்டுகிறது,'' என்றார் அவர். 

இன்று, சிலாங்கூர், கிள்ளானில் நடைபெற்ற 2025 சிலாங்கூர் மாநில அளவிலான ஜ.செக மாநாட்டில் கலந்து கொண்டப் பின்னர் லோக் செய்தியாளர்களிடம் பேசினார். 

கூட்டணிக் கட்சிகளுடனான அரசியல் ஒத்துழைப்பை வெற்றியடையச் செய்வதற்கான ஜ.செ.க-வின் உறுதிப்பாட்டின் சான்றாக இத்தியாகத்தைப் புரிந்து கொள்ள வேண்டும் என்று அவர் மேலும் கூறினார். 

--பெர்னாமா

[பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)]