தெஹ்ரான், 18 ஜனவரி (பெர்னாமா) -- மத்தியக் கிழக்கு நாடுகளில் ஒன்றான ஈரானில் ஏற்பட்டிருக்கும் போராட்டங்களுக்கு அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் தான் காரணம் என்று அதன் தலைவர் அயடோல்லா அலி கமேனி குற்றம் சாட்டியிருக்கிறார்.
அந்நாட்டில் ஏற்பட்டிருக்கும் உயிரிழப்புகளுக்கும், சேதங்களுக்கும் டிரம்ப்பே பொருப்பேற்க வேண்டும் என்று அவர் தெரிவித்திருக்கிறார்.
ஈரானில் கடந்த சில வாரங்களாக கமேனி ஆட்சிக்கு எதிரான போராட்டங்கள் நாளுக்கு நாள் வலுத்து வருகிறது.
போராட்டங்களை ஒடுக்க ஈரான் அரசும் தீவிர நடவடிக்கைகளை எடுத்து வரும் சூழலில் அங்கு நிலைமை மோசமாகி வருகிறது.
இதுவரை, போராட்டங்களினால் இதுவரை 3000 பேர் உயிரிழந்துள்ளனர்.
அந்நாட்டின் பொருளாதார பின்னடைவுகள் காரணமாக கடந்த டிசம்பர் 28-ஆம் தேதி போராட்டங்கள் வெடித்தன.
பின்னர் அவை கமேனி ஆட்சியை முடிவுக்குக் கொண்டும் ஆர்ப்பாட்டங்களாக மாற்றம் கண்டன.
இந்நிலையில், போராட்டக்காரர்களுக்கு எதிராக மரண தண்டனையை நிறைவேற்றினால் மிகக் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ஈரானை டிரம்ப் எச்சரித்திருந்தார்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)