Ad Banner
 அரசியல்

சாரா கட்டமைப்பு விரிவாக்கத்திற்கு அரசு முக்கியத்துவம்

17/01/2026 04:04 PM

கிள்ளான் , 17 ஜனவரி (பெர்னாமா) -- வசதி குறைந்தவர்களுக்கு உதவும் இலக்கை அடைவதை உறுதி செய்ய, ரஹ்மா அடிப்படை உதவித் தொகை, சாரா கட்டமைப்பை விரிவுப்படுத்தற்கான சிறந்த வழிக்கு அரசாங்கம் எப்போதும் முக்கியத்துவம் செலுத்தும்.

பொது மக்கள் தினசரி தேவைகளுக்கான பொருட்களைப் பெறுவதை எளிமையாக்க சிறிய கடைகளின் கட்டமைப்பை விரிவுப்படுத்துவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாக இரண்டாவது நிதியமைச்சர் டத்தோ ஶ்ரீ அமீர் ஹம்சா அசிசான் தெரிவித்தார்.

அத்தியாவசிய பொருட்களைப் பெறுவதில் பயனீட்டாளர்களுக்கு வாய்ப்புகள் வழங்கும் வகையில் சாராவில் உள்ளூர் தயாரிப்புகள் உட்பட கூடுதல் பொருட்கள் சேர்க்கப்படும் என்று அமீர் ஹம்சா கூறினார்.

''முன்பு அது அடிப்படைப் பொருட்களாக மட்டுமே இருந்தது. பின்னர், பற்பசை, பள்ளிப் பொருட்கள் மற்றும் அனைத்தையும் உட்படுத்தியதாக விரிவுப்படுத்தினோம். ஆனால், நமது இலக்குகள் அடைவதையும், கட்டுப்படுத்தப்படும் விஷயங்கள் உண்மையில் பெறுநர்களுக்கு உதவக்கூடியவை என்பதையும் நாம் கவனிக்க வேண்டும்,'' என டத்தோ ஶ்ரீ அமீர் ஹம்சா அசிசான் கூறினார்.

இன்று, சிலாங்கூர், கிள்ளான், புக்கிட் கூடா இடைநிலைப்பள்ளியில் நடைபெற்ற மைப்லஸ் சமூக தினத் திட்டத்தை தொடக்கி வைத்தப் பின்னர் செய்தியாளர்களிடம் அமீர் ஹம்சா அத்தகவல்களைப் பகிர்ந்து கொண்டார்.

மக்கள் தங்களுக்கான அடிப்படைத் தேவைகளை மிகவும் கட்டமைக்கப்பட்ட இலக்கிடப்பட்ட மற்றும் தொடர்ச்சியாக பூர்த்தி செய்வதை உறுதி செய்ய, சாராவில் மேம்பாடுகள் முழு ஈடுபாட்டுடன் மேற்கொள்ளப்படுவதாக டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் வெள்ளிக்கிழமை கூறியிருந்தார்.

-- பெர்னாமா 

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)