புத்ராஜெயா, 16 ஜனவரி (பெர்னாமா) -- உலு சிலாங்கூர் புக்கிட் தகாரில் நவீன பன்றி வளர்ப்பை மேற்கொள்வதற்குச் சூழல் மற்றும் நிர்வாக அடிப்படையில் அப்பகுதி பொருத்தமானதாக இருந்தால் சிலாங்கூர் மாநில அரசின் முடிவுக்கு மத்திய அரசாங்கம் எந்தவொரு தடையும் விதிக்காது.
எந்தவொரு கால்நடை வளர்ப்புத் திட்டமும் சுற்றுச்சூழல் தேவைகளைப் பூர்த்தி செய்து, வியூக திட்டமிடலின்படி செயல்படுத்தப்பட வேண்டும் என்று விவசாயம் மற்றும் உணவு உத்தரவாத அமைச்சர் டத்தோ ஶ்ரீ முஹமட் சாபு தெரிவித்தார்.
''ஆம், மாசுபாட்டைத் தவிர்க்க நாம் நவீனமயமாக்கலை நோக்கிச் செல்ல வேண்டும். மேலும் இது ஒரு நவீன அமைப்புடன் செய்யப்பட்டால் பரவலான தூய்மைக்கேடு இருக்காது, எனவே, நாங்கள், மத்திய அரசு, கல்வி அமைச்சு, சிலாங்கூரில் மேற்கொள்ளும் நடவடிக்கைகளை வரவேற்போம்'', என்றார் அவர்.
பெரிய அளவிலான கால்நடை வளர்ப்பு நடவடிக்கைகள் திட்டமிடப்பட்டு தற்போதுள்ள வழிகாட்டிகள் மற்றும் விதிமுறைகளுக்கு இணங்க மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
சிலாங்கூரில் உள்ள புக்கிட் தகாருக்கு பன்றி வளர்ப்பு பண்ணையை மாற்றுவதற்கான திட்டம் குறித்து வினவப்பட்டபோது, முஹமட் சாபு அவ்வாறு பதிலளித்தார்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30
(ஆஸ்ட்ரோ 502)