Ad Banner
 பொது

அம்னோவில் மீண்டும் இணைய விரும்புவோரை வரவேற்க புதிய செயற்குழு

16/01/2026 04:38 PM

ஜாலான் புத்ரா, 16 ஜனவரி (பெர்னாமா) --  முன்னாள் உறுப்பினர்கள் உட்பட கட்சியில் மீண்டும் இணைய விரும்பும் எந்தவொரு தரப்பையும் மீண்டும் வரவேற்கும் ஒரு ஆக்கப்பூர்வ நடவடிக்கையாக இன ஒற்றுமைக்கான ஒரு சிறப்பு செயற்குழுவை அம்னோ உருவாக்கவிருக்கிறது.

சம்பந்தப்பட்ட தரப்பினர், தனிநபராகவோ அல்லது குழுவாகவோ மீண்டும் இணையும் போது அதன் செயல்முறையை நிர்வகிக்கும் கடப்பாடு சம்பந்தப்பட்ட அச்செயற்குழுவிற்கு உள்ளதாக அம்னோ தலைவர் டத்தோ ஶ்ரீ டாக்டர் அஹ்மட் சாஹிட் ஹமிடி தெரிவித்தார்.

''நாங்கள் இங்குதான் பிறந்தோம். நாங்கள் இங்குதான் வளர்ந்தோம். இங்கேதான் போராட்டத்தின் அர்த்தத்தை இணைக்கிறோம். எனவே, சகோதர சகோதரிகள், எங்களின் உடன்பிறப்புகள், குடும்ப உறுப்பினர்கள் மீண்டும் இணைவதை வரவேற்க, தனிநபராகவோ அல்லது குழுவாகவோ எந்தவொரு தரப்பு இணைவதையோ அல்லது மீண்டும் பங்களிப்பதையோ ஏற்க, இன ஒற்றுமைக்கான ஒரு சிறப்பு செயற்குழு உருவாக்கப்படும்'', என்று அவர் கூறினார்.

இன்று, கோலாலம்பூர் உலக வாணிப மையத்தில் 2025ஆம் ஆண்டு அம்னோ பொதுப்பேரவையில் கொள்கை உரையாற்றும் போது டத்தோ ஶ்ரீ டாக்டர் அஹ்மட் சாஹிட் அவ்வாறு குறிப்பிட்டார்.

மலாய்-இஸ்லாமிய அரசியலை மீண்டும் வலுப்படுத்துவதற்காக கட்சியை விட்டு வெளியேறியவர்கள் மீண்டும் திரும்புவதற்கு அம்னோ எப்போதும் வாய்ப்பளிக்கும் என்று அவர் கூறினார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 
(ஆஸ்ட்ரோ 502)