கோலாலம்பூர், ஜனவரி 15 (பெர்னாமா) -- மலேசிய தேசிய செய்தி நிறுவனமான பெர்னாமா வானொலித் தலைவர் அஸ்லான் இட்ரிஸ்-இன் மறைவு அப்பிரிவில் குறிப்பாக அவரது தலைமையில் பணியாற்றிய ஊழியர்களுக்கு பேரிழப்பாக கருதப்படுகிறது.
அனைவரிடமும் மகிழ்ச்சியாக பழக்கூடிய அஸ்லான் நிர்வாகத்திற்கு சிந்தனைமிக்க பரிந்துரைகளை வழங்குபவராக திகழ்ந்தார் என்று பெர்னாமா தலைமை நிர்வாக அதிகாரி டத்தின் படுக்கா நூருல் அஃபிடா கமாலுடின் தெரிவித்தார்.
''முதலில், மறைந்த அஸ்லானின் மனைவி வான் ஷாரினா மற்றும் அவரது குடும்பத்தினருக்கும், பெர்னாமா வானொலி குடும்பத்தினருக்கும் எனது இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். இது மிகப் பெரிய அதிர்ச்சி செய்தி. ஏனென்றால், அவரது மறைவு பெர்னாமா வானொலி பிரிவுக்கு மட்டுமல்லாது அனைவருக்கும் ஓர் அதிர்ச்சி செய்திதான்.'' என்றார் டத்தின் படுக்கா நூருல் அஃபிடா கமாலுடின்
இன்று மதியம் 12.15 அளவில் தாமான் செலாசி-இல் உள்ள இஸ்லாமிய மையத்து கொல்லையில் அஸ்லான்-இன் நல்லுடல் அடக்கம் செய்யப்பட்டது.
பெர்னாமா தலைமைச் செய்தி ஆசிரியர் அருள் ராஜூ துரை ராஜ் செய்தி சேவைக்கான இடைக்கால துணைத் தலைமை செய்தி ஆசிரியர் முகஹமட் ஷுக்ரி இஷா துணைப் பிரதமர் டத்தோஸ்ரீ டாக்டர் அஹ்மட் ஜாஹிட் ஹமிடி-இன் பத்திரிக்கைச் செயலாளர் ஷுஹைமி முகமது தொடர்பு அமைச்சரின் பத்திரிக்கைச் செயலாளர் லேடி முஹிலிஆகியோரும் வருகைப் புரிந்திருந்தனர்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)