கோலாலம்பூர், ஜனவரி 15 (பெர்னாமா) -- கடந்த திங்கட்கிழமை, புக்கேட் தமன்சாரா-வில் உள்ள ஒரு தனியார் பல்கலைக்கழகத்தில் மாணவர் ஒருவரின் உயிரைப் பறித்த வெடிப்புச் சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி வழங்க Skuad PERKESO Prihatin-னை சமூக பாதுகாப்பு அமைப்பு PERKESO அமைத்துள்ளது.
சம்பவத்தில் காயமடைந்த இருவர் முன்னதாக LINDUNG Pekerja திட்டத்தின் கீழ் பங்களித்தவர்கள் என்றும் அவர்கள் அத்திட்டத்தின் மூலம் பெறப்படும் சலுகைகளுக்குத் தகுதியானவர்கள் என்றும் PERKESO தெரிவித்தது.
அத்திட்டத்தின் கீழ் இதுவரை அவர்கள் அளித்த பங்களிப்பின் மூலம், பாதிக்கப்பட்ட 32 வயது விரிவுரையாளரான தே வீ லியோன் மற்றும் குத்தகையாளரான 55 வயதான லியூ யூங் சென் ஆகிய இருவரும் தற்காலிக இயலாமைக்கான நலத்தொகை எஃப்-எச்-யு-எஸ்-யைப் பெற தகுதியானவர்கள் என்று PERKESO அறிவித்தது.
இந்நிலையில் பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கக்கூடிய பிற சலுகைகளையும் PERKESO ஆராயும் என்றும் அது கூறியது.
விபத்து குறித்து புகாரளிக்கவும் சலுகைகள் வழங்குவதற்கான தொடர் செயல்முறையை மேற்கொள்ளவும் பாதிக்கப்பட்டவர்களின் முதலாளியை PERKESO நேரடியாக தொடர்பு கொள்ளும்.
இதனிடையே, பராமரிப்பு குத்தகையாளர் மற்றும் சிற்றுண்டிச்சாலை ஊழியர் உட்பட மூவர் PERKESO-வில் எந்தவொரு பங்களிப்பும் செய்யவில்லை என்றும் எஞ்சியவர்கள் மாணவர்கள் என்று விசாரணையில் கண்டறியப்பட்டது.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)