Ad Banner
 அரசியல்

ஹலால் தொழில்துறையில் பெண்கள் திட்டம் தேசிய வியூகமாக உயர்த்தப்பட வேண்டும் – அம்னோ மகளிர்

15/01/2026 04:58 PM

கோலாலம்பூர், ஜனவரி 15 (பெர்னாமா) -- உலகளாவிய ஹலால் தொழில்துறையில் பெண்கள் முக்கிய பங்காற்றும் முன்னணி வீரர்களாக அதிகமாக ஈடுபடுவதை விரிவுப்படுத்த ‘ஹலால் தொழில்துறையில் பெண்கள்’ எனும் திட்டத்தை தேசிய அளவிலான வியூக செயல்திட்டமாக மேம்படுத்த வேண்டும் என்று அம்னோ மகளிர் பிரிவு பரிந்துரைத்துள்ளது.

பெண்கள் நீண்ட காலமாக உள்நாட்டு அளவில் "ஹலால் பாதுகாவலர்கள்'' ஆக செயல்பட்டு வந்தாலும் பெரிய அளவிலான தொழில்துறையினராக பின்தங்கியிருப்பதால் இத்தீர்மானத்தை தேசிய ஹலால் தொழில்துறை மேம்பாட்டு மன்றம் எம்.பி.ஐ.எச்-இன் கீழ் அதிகாரப்பூர்வமாக இணைப்பது சரியானது என்று அம்னோ மகளிர் பிரிவுத் தலைவி த்தோ ஶ்ரீ டாக்டர் நோராய்னி அஹ்மட் தெரிவித்தார்.

''இந்த அணுகுமுறையால், ஹலால் தொழில் இனி லாபம் ஈட்டுவது மட்டுமல்லாது, பெண்களுக்கு அதிகாரம் அளிப்பதற்கும், குடும்ப பொருளாதாரங்களை வலுப்படுத்துவதற்கும் உலகின் முன்னணி ஹலால் தொழிலாக மலேசியாவை நிலையை மேம்படுத்தும் ஒரு கருவியாக மாறுகிறது. பெண்கள் உற்பத்தியாளர்கள் மட்டுமல்ல. பெரிய துறையில் முக்கியப் பங்கு வகிக்க வேண்டும்.'' என்றார் டத்தோ ஶ்ரீ டாக்டர் நோராய்னி அஹ்மட் 

இன்று, கோலாலம்பூர் உலக வாணிப மையத்தில் நடைபெற்ற அம்னோவின் மகளிர் பிரிவு பொதுப் பேரவையில் கொள்கை உரையாற்றிய போது டாக்டர் நோராய்னி அவ்வாறு கூறினார்.

முறைசாரா மற்றும் சுயத்தொழில் செய்யும் பொருளாதாரத் துறையில் பெண் தொழில்முனைவோரை ஆதரிக்கும் "Center of Excellence DELIMA" எனும் புதிய திட்டத்தை தோட்ட மற்றும் மூலப்பொருள் அமைச்சருமான அவர் தொடக்கி வைத்தார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)