கோலாலம்பூர், 13 ஜனவரி (பெர்னாமா) -- மற்றொரு நிலவரத்தில், விசாரணையின் தேவைகளைப் பொறுத்தே தரைப்படை முன்னாள் தளபதியின் தடுப்புக் காவல் நீட்டிக்கப்படுவது குறித்து முடிவு செய்யப்படும் என்று டான் ஶ்ரீ அசாம் பாக்கி தெரிவித்தார்.
முன்னதாக அந்நபருக்கு விதிக்கப்பட்ட ஏழு நாள் தடுப்புக் காவலில், இன்னும் ஒரு நாள் மீதமுள்ளதை அவர் சுட்டிக் காட்டினார்.
''எங்களுக்கு இன்னும் ஒரு நாள் (தடுப்புக் காவல்) இருப்பதால் நான் உங்களுக்கு எந்த தகவலையும் வழங்க இயலாது. மேலும் எனது புலனாய்வாளர்களிடம் நான் சரிபார்க்க வேண்டும், ஏனென்றால் உண்மையில் எங்களுக்கு 14 நாட்கள் (அதிகபட்சம்) உள்ளன. எனவே நாளை ஏழாவது நாள் ஆகும். அவர்களுக்கு அதிக நேரம் தேவைப்பட்டால் நாங்கள் நீதிமன்றத்தில் விண்ணப்பிப்போம்,'' என
டான் ஶ்ரீ அசாம் பாக்கி கூறினார்.
தரைப் படையின் கொள்முதல் குத்தகை குறித்த ஊழல் வழக்கு தொடர்பாக, SPRM-மின் விசாரணைக்கு உதவும் நோக்கில், தரைப் படை முன்னாள் தளபதி ஏழு முதல் 14 நாள்களுக்கு தடுத்து வைக்கப்பட்டதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டன.
மேலும், அந்த முன்னாள் இராணுவ அதிகாரியின் முதல் மனைவி ஜனவரி 10-ஆம் தேதி வரையும், அவரின் இரண்டாவது மனைவி ஜனவரி 13-ஆம் தேதி வரையும் தடுத்து வைக்கப்பட்டனர்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)