Ad Banner
 பொது

திறன்மிக்க பங்களிப்பை ஆற்ற 'நாடி' முனைய வேண்டும்

13/01/2026 06:01 PM

ஷா ஆலம், ஜனவரி 13 (பெர்னாமா) -- துல்லியமான, உண்மையான மற்றும் அண்மைய தகவல்கள் அடிமட்டம் வரையில் சென்றடைவதை உறுதி செய்வதற்கு அரசாங்கத்திற்கும் மக்களுக்கும் இடையே ஒரு தொடர்பாளராகத் தேசிய தகவல் பரப்பு மையமான நாடியின் ஆலோசனைக் குழுத் தலைவர் ஆற்றல்மிக்க பங்களிப்பை வழங்க வேண்டும் என்று டத்தோ ஃபஹ்மி தெரிவித்தார்.

அரசாங்கத் தொடர்புகளை வலுப்படுத்துவதிலும் மக்களிடையே நிலவி வரும் அவதூறு மற்றும் போலி தகவல்களை எதிர்ப்பதிலும் அவர்களின் நியமனம் பெரும் கடப்பாட்டைக் கொண்டுள்ளதை அவர் சுட்டிக்காட்டினார்.

"எனவே, கோலாலம்பூரிலும் சிலாங்கூரிலும் ஆலோசனைக் குழுக்களை நியமிப்பது மத்திய மற்றும் மாநில அரசாங்கத்தின் தகவல்களை அடிமட்டம் வரை கொண்டு சேர்ப்பதில் பேருதவியாக இருக்கும் என்று நான் நம்புகிறேன்" என்றார் டத்தோ ஃபஹ்மி ஃபட்சில்.

நாடு தழுவிய அளவில் உள்ள ஒவ்வொரு சட்டமன்றத்திலும் அரசாங்க சேவைகள் மற்றும் தகவல்களை மக்களுக்கு நெருக்கமாகக் கொண்டு சேர்ப்பதற்குக் குறைந்தபட்சம் ஒரு தகவல் பரப்பு மையமாவது இருக்க வேண்டும் என்று 2023ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் பிரதமர் வழங்கிய உத்தரவின்படி அனைத்து சட்டமன்றங்களிலும் நாடி நிறுவப்பட்டதாக ஃபஹ்மி தெரிவித்தார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)