சபா, ஜனவரி 12 (பெர்னாமா) -- லாமாக் மாநில சட்டமன்றத் தொகுதிக்கான இடைத்தேர்தலில் சேவையாற்ற வாய்ப்பு வழங்கப்பட்டால் இளைஞர்களை வலுப்படுத்துதல் மற்றும் தொகுதியை மேம்படுத்துவதில் தேசிய முன்னணி தொடர்ந்து கவனம் செலுத்தும்.
வேலைவாய்ப்புகள், விளையாட்டு, கல்வி மற்றும் நீர் மற்றும் மின்சாரம் போன்ற அடிப்படை வசதிகள் உள்ளிட்ட மேம்பாட்டின் தொடர்ச்சியை உறுதி செய்ய அரசாங்கத் தரப்புக் கட்சியின் வேட்பாளரை அத்தொகுதி வாக்காளர்கள் தேர்தெடுப்பது முக்கியம் என்று லாமாக் தொகுதியின் தேசிய முன்னணி வேட்பாளர் முஹமட் இஸ்மாயில் அயோப் தெரிவித்தார்.
''அரசாங்க கட்சி மற்றும் வேட்பாளரை நாம் தேர்ந்தெடுக்க வேண்டும் என்பதை லாமாக் பகுதி மக்கள் புரிந்து கொள்ள வேண்டும். பிரச்சனைகளுக்கு குரல் கொடுப்பது உட்பட அரசாங்கத்தின் மூலம் லாமாக்கில் உள்ள பிரச்சனைகளைத் தீர்வுக் காண்பது அவசியமாகும்.'' என்றார் முஹமட் இஸ்மாயில் அயோப்
17-வது மாநில தேர்தலில் சுயேட்சை வேட்பாளராக இருந்து தற்போது லாமாக் தொகுதியின் தேசிய முன்னணி வேட்பாளராக மாறியிருக்கும் முஹமட் இஸ்மாயில் அயோப் அரசியல் சூழலில் இது இயல்பு என்றக் கருத்தையும் முன் வைத்தார்.
தமது முடிவை சில கட்சிகள் ஏற்றுக்கொள்ளாத போதிலும் வாக்காளர்கள் திறந்த மனதுடனும் சிறந்த வேட்பாளர்களை தேர்வு செய்வதில் திறன் கொண்டவர்களாக இருப்பர் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)