Ad Banner
 பொது

நான்கு ஆண்டுகளில் 7618 கோடி ரிங்கிட் வருவாய் வசூல் பதிவு

09/01/2026 04:28 PM

புத்ராஜெயா, ஜனவரி 09 (பெர்னாமா) -- கடந்த நான்கு ஆண்டுகளில், மிக அதிகமான வருவாய் வசூலாக, 7 ஆயிரத்து 618 கோடி ரிங்கிட்டை, அரச மலேசிய சுங்கத்துறை, ஜே.கே.டி.எம் பதிவுச் செய்துள்ளது.

2024-ஆம் ஆண்டின் வருவாய் வசூல் 6 ஆயிரத்து 557 கோடி ரிங்கிட்டாக பதிவுச் செய்யப்பட்ட நிலையில், கடந்தாண்டு 16.18 விழுக்காடு அதிகரித்து, ஆயிரத்து 61 கோடி ரிங்கிட்டாக உயர்ந்துள்ளதாக, ஜே.கே.டி.எம்-இன் தலைமை இயக்குநர் டத்தோ அனிஸ் ரிஸானா முஹமட் சாய்னுடின் கூறினார்.

2025-ஆம் ஆண்டில் பதிவுச் செய்யப்பட்ட குறிப்பிடத்தக்க அதிகரிப்பு, 2022 முதல் 2025-ஆம் ஆண்டுகள் வரை ஜே.கே.டி.எம் வசூலித்த வருவாயின் ஒட்டுமொத்த செயல்திறன், நிலையான மற்றும் அதிக தாக்கத்தை ஏற்படுத்துவதாக, டத்தோ அனிஸ் ரிஸானா தெரிவித்தார்.

அதோடு ஒட்டுமொத்த வரி எண்ணிக்கை, அமலாக்க மற்றும் வர்த்தக வசதிகளை வலுப்படுத்துவதில் ஜே.கே.டி.எம்-மின் வியூக அணுகுமுறையின் செயல்திறனை நிரூபிப்பதாகவும், அவர் கூறினார்.

"ஒட்டுமொத்தமாக, இந்த சாதனை 2024 மற்றும் 2025-ஆம் ஆண்டுகள், தொடர்ச்சியாக இரண்டு ஆண்டுகளாக 1000 கோடி ரிங்கிட்டை தாண்டிய அதிகரிப்பைப் பிரதிபலிக்கிறது," என டத்தோ அனிஸ் ரிசானா முஹமட் சைனூடின் கூறினார்.

மனிதவள மாற்றத்திற்கான சவால்கள் எதிர்கொண்ட போதிலும், பணி செயல்முறை, செயல்பாட்டு கட்டமைப்பு மற்றும் தொழில்நுட்பத்தின் வியூக பயன்பாட்டின் மூலம் கே.கே.டி.எம் அதன் குறிப்பிடத்தக்க வருவாய் வசூல் செயல்திறனை பராமரிப்பதாக, அவர் விவரித்தார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)