Ad Banner
 உலகம்

அமெரிக்காவுடன் ஒத்துழைக்காவிடில் கடும் விளைவு; வெனிசுலா இடைக்கால அதிபருக்கு டிரம்ப் எச்சரிக்கை

05/01/2026 04:41 PM

ஃபுளோரிடா, 05 ஜனவரி (பெர்னாமா) -- வெனிசுலா இடைக்கால அதிபர் டெல்சி ரொட்ரிகுவெஸ், வாஷிங்டனுடன் ஒத்துழைக்கவிருப்பதாகக் கூறிய 24 மணி நேரத்திற்குள் ஒரு புதிய உத்தரவை அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் விதித்துள்ளார்.

அமெரிக்கா மற்றும் அதன் நட்பு நாடுகளுடன் ஒத்துழைக்காவிட்டால், வெனிசுலாவின் புதிய அதிபர் 'மிகப் பெரிய விலையை' செலுத்த நேரிடும் என்ற உவமையுடன், டிரம்ப் இன்று மிரட்டல் விடுத்துள்ளார்.

''நாடு பாதக நிலையில் உள்ளது. எண்ணெய் உற்பத்தி நாம் அதை இயக்குவதை விட மிகக் குறைந்த மட்டத்தில் உள்ளது. நாம் முதலீடு செய்ய வேண்டும். வெனிசுலா உள்ளிட்ட நாட்டிற்குச் செல்கிறோம். அவை நாட்டைக் கைப்பற்றும் சக்தியாக உள்ளன,'' என்றார் அவர்.

கடந்த சனிக்கிழமை,  நியூயார்க்கில் போதைப்பொருளை விநியோகித்ததாக மடுரோ மற்றும் அவரின் மனைவி மீது குற்றம் சுமத்தி  அமெரிக்கா அதிகாரத்தைக் கைப்பற்றியது. 

--பெர்னாமா

[பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)]