Ad Banner
Ad Banner
Ad Banner
 பொது

சொந்த ஊர்களுக்கு திரும்ப ஈ.டி.எஸ்-ஐ தேர்ந்தெடுக்கும் மக்கள்

18/03/2026 05:07 PM

கோலாலம்பூர், 18 மார்ச் (பெர்னாமா) -- நோன்புப் பெருநாளை முன்னிட்டு தங்களின் சொந்த ஊர்களுக்கு திரும்ப ஈ.டி.எஸ் எனப்படும் மின்சார ரயில் சேவையையே மக்கள் அதிகம் தேர்ந்தெடுத்துள்ளனர். 

கே.எல் செண்ட்ரல் நிலையத்திற்கு முன்கூட்டியே மக்கள், ஈ.டி.எஸ் முகப்பில் பயணச் சீட்டுகளை பெற்றுக் கொண்டு தங்களின் பயணங்களை தொடங்கியது, இன்று பெர்னாமா தொலைக்காட்சி மேற்கொண்ட கண்ணோட்டத்தில் தெரிய வந்தது. 

கே.எல் செண்ட்ரலில் நிலைமை கட்டுப்பாட்டில் இருப்பதோடு, பயணிகளின் எண்ணிக்கை அதிகரிப்பிற்கு ஏற்ப பயணங்களின் எண்ணிக்கையையும் அந்நிர்வாகம் அதிகரித்துள்ளது.

மேலும், கடந்தாண்டு டிசம்பர் 12-ஆம் தேதி தொடங்கப்பட்ட ஜோகூர் பாருவுக்கான ஈ.டி.எஸ் சேவையும் பயணிகளுக்கான தேர்வாகியுள்ளது. 

நோன்புப் பெருநாளில், ஜே.பி. சென்ட்ரல், குளுவாங் மற்றும் சிகாமட் போன்ற இடங்களுக்கு முதன்முறையாக இச்சேவை இயக்கப்படுகிறது.

''நான் எப்போதும் ஈ.டி.எஸ்-இல் தான் பயணிப்பேன். பிள்ளைகளுடன் சென்றால் காரில் பயணிப்பேன். சீக்கிரம் சென்று விடலாம். உறங்கவும் முடியும்,'' என்று நோர்மா மொக்தார் கூறினார். 

''ஈ.டி.எஸ் எப்போதும் பிடித்த பயண சேவை. எனது முதன்மை தேர்வு. போக்குவரத்து நெரிசல் இல்லை. வசதியாக இருக்கும். தாமதமாவதும் குறைவு,'' என்று நோர்சியாத்தி தெரிவித்தார். 

இம்முறை அதிகரித்துள்ள பயணத் தேவையை அடுத்து, நேற்று மார்ச் 17 தொடங்கி மார்ச் 29-ஆம் தேதி வரை 13 நாள்களுக்கு கூடுதலாக 228 பயண சேவையை KTMB நிறுவனம் அதிகரித்துள்ளது. 

--பெர்னாமா

[பெர்னாமா செய்திகள் நேரலை: மாலை 6 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)]