Ad Banner
 விளையாட்டு

யுனைடெட் கிண்ணம்; ஜப்பானை வீழ்த்திய கிரேக்கம்

03/01/2026 07:23 PM

பெர்த், ஜனவரி 03 (பெர்னாமா) -- யுனைடெட் கிண்ண டென்னிஸ் போட்டி குறித்த செய்தி.

நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் ஜப்பானைச் சந்தித்த கிரேக்கம் 3-0 என்ற புள்ளிகளில் வெற்றி பெற்றது.

ஆஸ்திரேலியா பெர்த்தில் நடைபெற்ற இவ்வாட்டத்தில் இ குழுவில் இடம்பெற்றுள்ள அவ்விரு நாடுகளும் மோதின.

முதல் ஆட்டத்தில் ஜப்பானின் நயோமி ஒசாக்காவும் கிரேக்கத்தின் மரியா சக்காரியும் களமிறங்கினர்.

இவ்வாட்டத்தில் 6-4, 6-2 என்ற நேரடி செட்களில் மரியா சக்காரி எளிதாக வெற்றி பெற்றார்.

ஆடவருக்கான ஆட்டத்தில் ஷிந்தாரோ மோச்சிசுக்கி ஷிந்தாரோ மொச்சிசூக்கியுடன் விளையாடிய ஸ்டெபனோஸ் சிட்சிபாஸ் 6-3, 6-4 என்ற புள்ளிகளில் வெற்றி பெற்று கிரேக்கத்திற்கு இரண்டாவது புள்ளியைப் பெற்று தந்தார்.

அதனை தொடர்ந்து, கலப்பு இரட்டையர் பிரிவில் ஒன்று சேர்ந்த மரியா சக்காரியும் ஸ்டெபனோஸ் சிட்சிபாஸ்ஸும் ஜப்பானின் யசுதாக உச்சியமா-நாவோ ஹிபினோ ஜோடியை 6-2, 6-3 என்ற புள்ளிகளில் தோற்கடித்து கிரேக்கத்தின் வெற்றியை உறுதி செய்தனர்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)