மலாக்கா, ஜனவரி 3 (பெர்னாமா) -- கடந்த புதன்கிழமை, பந்தாய் கிளேபாங் கடற்கரை-இல் புத்தாண்டை வரவேற்கும் கொண்டாட்டத்தின் போது ஹெலிகாப்டர் அவசரமாக தரையிறங்கிய சம்பவம் குறித்த விசாரணையில் அரச மலேசிய கடற்படை TLDM-மின் தொழில்நுட்பக் குழு கவனம் செலுத்தி வருகிறது.
அச்சம்பவத்திற்கான உண்மைக் காரணத்தைக் கண்டறிய அக்குழு விரிவான விசாரணையை மேற்கொள்ளும் என்று தற்காப்பு துணை அமைச்சர் அட்லி சஹாரி தெரிவித்தார்.
''விபத்துகளைத் தவிர்க்க நாம் எப்படி முயற்சி செய்கிறோம் என்பதைப் பார்க்க வேண்டும். ஆக, எந்தவொரு விபத்திலும் எங்கள் உறுப்பினர்கள் பாதுகாப்பாக இருப்பதை உறுதி செய்வதற்காக எப்போது பயிற்சிகள் மேற்கொள்ளப்படுவதை அறிவோம். ஆக மொத்தத்தில், எங்கள் உறுப்பினர்கள் அனைவரும் பாதுகாப்பாக இருப்பதற்கு இறைவனுக்கு நன்றி கூறுகிறோம்.'' என்றார் அட்லி சஹாரி
இன்று, புலாவ் செபாங்-இல் உள்ள பேரங்காடியில் நடைபெற்ற 2026-ஆம் ஆண்டுக்கான ''Jom Shopping Barangan Sekolah'' நிகழ்ச்சியில் கலந்து கொண்டப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அட்லி சஹாரி இத்தகவல்களைப் பகிர்ந்து கொண்டார்.
இந்நிகழ்ச்சியில் 500 மாணவர்களும் ஏழ்மையான குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்களும் சம்பந்தப்பட்ட பேரங்காடியில் பள்ளிக்குத் தேவையான பொருட்களை வாங்குவதற்கு நூறு ரிங்கிட்டிற்கான பற்றுச்சீட்டை பெற்றுக் கொண்டனர்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)