புது டெல்லி, ஜனவரி 01 (பெர்னாமா) -- புத்தாண்டின் போது அடர்ந்த புகைமூட்டத்தினால் இந்தியத் தலைநகர் புது டெல்லியில் காற்றின் தரம் மோசமடைந்துள்ளது.
இந்நிலையில் விமான மற்றும் ரயில் பயணங்களில் தாமதம் ஏற்பட்டுள்ளது.
பல கண்காணிப்பு நிலையங்களில் 24 மணி நேர காற்று தரக் குறியீடு 448 வரை பதிவானதாக மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் தரவு காட்டுகிறது.
இதனால், 148 விமானப் பயணங்கள் ரத்து செய்யப்பட்ட வேளையில் இரு விமானங்கள் திசை திருப்பப்பட்டதாக விமான நிலையம் அறிக்கை ஒன்றில் கூறியது.
வட இந்தியாவின் சில மாநிலங்களில் மிதமான காற்று மற்றும் அதிக ஈரப்பதம் காரணமாக அடர்த்தியான புகைமூட்டம் தொடர வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் ஐ.எம்.டி முன்னதாகவே கணித்திருந்தது.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)