புது டெல்லி, டிசம்பர் 22 (பெர்னாமா) -- இந்தியா, புது டெல்லியில் நிலவும் காற்று தூய்மைக்கேட்டின் காரணமாக ஏற்பட்ட தெளிவற்ற வானிலையினால் நேற்று விமான நிலையத்தில் சுமார் 97 விமானப் பயணங்கள் ரத்து செய்யப்பட்ட நிலையில் 200க்கும் மேற்பட்ட பயணங்கள் தாமதமாகின.
அங்கு வந்திறங்கும் 48 விமானங்களும் புறப்படுவதற்குத் தயாராகும் 49 விமானப் பயணங்களும் ரத்து செய்யப்பட்டுள்ளது.
சுமார் 200க்கும் மேற்பட்ட விமானப் பயணங்களில் 23 நிமிடங்களுக்குத் தாமதம் ஏற்பட்டதாக Flightradar24.com எனும் விமான கண்காணிப்பு தளத்தின் அண்மைய தகவல்கள் காட்டுகின்றன.
எனினும் விமான சேவை சீராக நடைபெற்று வருவதாகப் புது டெல்லி அனைத்துலக விமான நிலையம் DIAL தமது அதிகாரப்பூர்வ X தளத்தில் குறிப்பிட்டிருந்தது.
இதனிடையே, நாட்டின் மிகப்பெரிய விமான நிலையமான இந்திரா காந்தி அனைத்துலக விமான நிலையத்தை DIAL நிர்வகித்து வரும் நிலையில் ஒரு நாளைக்குச் சுமார் 1,300 விமான சேவையை அது இயக்கி வருகின்றது.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)