Ad Banner
Ad Banner
Ad Banner
 பொது

அனுமதியின்றி நங்கூரமிட்ட கப்பல் தடுத்து நிறுத்தப்பட்டது

31/12/2025 05:20 PM

கிள்ளான், 31 டிசம்பர் (பெர்னாமா) -- இந்தோனேசிய பணியாளர்கள் ஐவர் கொண்ட டேங்கர் கப்பல் அனுமதியின்றி நங்கூரமிட்டதை அடுத்து, சிலாங்கூர் மலேசிய கடல்சார் அமலாக்க நிறுவனம் நேற்று மாலை மேற்கொண்ட சோதனை நடவடிக்கையில் அதனைத் தடுத்து வைத்தது.

இது தொடர்பில், கிள்ளான் துறைமுகத்திடமிருந்து புகார் கிடைத்ததாகவும், அந்தத் துறைமுகத்தில் இருந்து மேற்கே 0.9 கடல் மைல் தொலைவில் டேங்கர் கப்பல் தடுத்து நிறுத்தப்பட்டதாக, மாநில கடல்சார் இயக்குநர் கேப்டன் அப்துல் முஹைமின் முஹமட் சாலே தெரிவித்தார்.

அக்கப்பலை 21-இல் இருந்து 59 வயதிற்குட்பட்ட நான்கு பணியாளர்களுடன் கேப்டன் ஒருவர் இயக்கியது கண்டறியப்பட்டதாக கேப்டன் மேரிடிம் அப்துல் முஹைமின் கூறினார்.

அவர்கள் அனைவருக்கும் முறையான அடையாள ஆவணங்கள் இருந்தபோதிலும், நங்கூரமிடுவதற்கான அனுமதி ஆவணங்களை அவர்கள் சமர்ப்பிக்கத் தவறியதாக அவர் குறிப்பிட்டார்.

அதனைத் தொடர்ந்து, கைது ஆணை பிறப்பிக்கப்பட்ட நிலையில், தொடர் விசாரணைக்காக கப்பலின் கேப்டன் சிலாங்கூர் கடல்சார் தலைமையகத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)