வாடிகன், 25 டிசம்பர் (பெர்னாமா) -- உதவித் தேவைப்படுபவர்களுக்கு உதவ கிருஸ்துவர்கள் முன்வர வேண்டும் என்று கத்தோலிக்கத் திருச்சபையின் தலைவர் போப்பாண்டவர் லியோ அறிவுறுத்தியிருக்கிறார்.
ஏழைகளுக்கும் அந்நியர்களுக்கும் உதவ மறுப்பது கடவுளையே நிராகரிப்பதற்குச் சமம் என்று அவர் தமது கிருஸ்துமஸ் சிறப்பு வழிப்பாட்டில் கூறினார்.
போப்பாண்டவராக நியமிக்கப்பட்டு, லியோ கலந்து கொள்ளும் முதல் கிருஸ்துமஸ் சிறப்பு பிராத்தனை கூட்டம் இதுவாகும்.
நேற்றிரவு மணி 10-க்கு கிருஸ்துமஸ் சிறப்பு பிராத்தனையை அவர் வழி நடத்தினார்.
இது முன்பு நடத்தப்படும் கிறிஸ்துமஸ் பிரார்த்தனையை விட சற்று மாறுபட்டிருந்தது.
கிருஸ்துமஸ் சிறப்பு பிராத்தனையை முன்னிட்டு St. Peter's சதுகத்தில் பலர் கூடியிருந்தனர்.
அமெரிக்காவின் முதல் போப்பாண்டவரான லியோ, மறைந்த போப் பிரான்ஸ்சிசுக்குப் பிறகு கத்தோலிக்கத் திருச்சபையின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30
(ஆஸ்ட்ரோ 502)