செலாயாங், டிசம்பர் 24 (பெர்னாமா) -- சூப்பர் லீக் கிண்ண காற்பந்து போட்டி.
நேற்றிரவு நடைபெற்ற பி.டி.ஆர்.எம் எஃப்.சி அணி உடனான ஆட்டத்தில் சிலாங்கூர் 3-1 என்ற கோல்களில் வெற்றி பெற்றது.
செலாயாங் நகராட்சி மன்ற அரங்கில் நடைபெற்ற இவ்வாட்டத்தின் 20வது நிமித்தில் கிரிகோர் மோரேஸ் வழி முதல் கோலை அடித்து சிலாங்கூர் முன்னணி வகிக்க தொடங்கியது.
முதல் பாதி ஆட்டத்தைத் தனக்குச் சாதகமாக முடித்துக் கொண்ட சிலாங்கூர் இரண்டாம் பாதி ஆட்டத்தை ஆக்கிரமிக்க தொடங்கியது.
அதன் பலனாக 49வது நிமிடத்தில் சிலாங்கூர் இரண்டாவது கோலை அடித்து பி.டி.ஆர்.எம் எஃப்.சியைப் பின்னுக்குத் தள்ளியது.
53வது நிமிடத்தில் ஃபக்ருல் அசிம் பி.டி.ஆர்.எம் அணிக்கான ஒரே கோலை அடித்தார்.
இருப்பினும் 67வது நிமிடத்தில் மூன்றாவது கோலை அடித்து சிலாங்கூர் தனது வெற்றியை உறுதி செய்து கொண்டது.
இந்த வெற்றியின் வழி சிலாங்கூர் 22 புள்ளிகளைப் பெற்று புள்ளிப்பட்டியலில் நான்காவது இடத்தில் உள்ளது.
மற்றோர் ஆட்டத்தில் திரெங்கானு எஃப்.சி சபாவிடம் 1-3 என்ற கோல்களில் தோல்வி கண்டது.
சொந்த அரங்கில் விளையாடினாலும் திரெங்கானு எஃப்.சி அந்த வாய்ப்பைச் சரியாகப் பயன்படுத்த தவறியது.
முதல் கோலை அடித்து திரெங்கானு எஃப்.சி முன்னணி வகித்தாலும் அடுத்த மூன்று கோல்களை அடித்து சபா திரெங்கானுவின் வெற்றி கனவைச் சிதைத்தது.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)