Ad Banner
Ad Banner
 விளையாட்டு

ஏழாவது வெற்றியைப் பதிவு செய்தது அஸ்டன் வில்லா

22/12/2025 05:59 PM

லண்டன், டிசம்பர் 22 (பெர்னாமா) -- இங்கிலாந்து பிரிமியர் லீக் கிண்ண காற்பந்து போட்டி இன்று அதிகாலை நடைபெற்ற ஆட்டத்தில் மான்செஸ்டர் யுனைடெட் அணியை 2-1 என்ற கோல் எண்ணிக்கையில் வீழ்த்தியதன் மூலம் தனது ஏழாவது வெற்றியை அஸ்டன் வில்லா அணி பதிவு செய்தது.

சொந்த அரங்கில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் ஆதரவாளர்களின் காத்திருப்புக்கு இடையே 45ஆவது நிமிடத்தில் மோர்கன் ரோஜர்ஸ் முதல் கோலை அடித்தார்.

இருப்பினும் அந்த மகிழ்ச்சி நீடிக்கவில்லை.

மாறாக, பரபரப்பான ஆட்டத்திற்கு இடையே வில்லா-மாட்டி காஷ்  செய்த தவற்றை மாதேஷ் கன்ஹா தனக்குச் சாதகமாகப் பயன்படுத்தி 1-1 என ஆட்டத்தைச் சமப்படுத்தினார்.

இரண்டாம் பாதி ஆட்டத்தின் 57ஆவது நிமிடத்தில் ரோஜர்ஸ் இரண்டாவது கோலை அடித்து அனைவரின் கவனத்தையும் ஈர்த்ததுடன் இறுதிப் போட்டிக்கான தனது ஆளுமையையும் வெளிப்படுத்தினார்.

இப்போட்டியில் அடைந்த வெற்றியைத் தொடர்ந்து அனைத்து போட்டிகளிலும் தொடர்ச்சியாக 10 வெற்றிகளை வில்லா பதிவு செய்துள்ளது.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)