கோலாலம்பூர், டிசம்பர் 21 (பெர்னாமா) -- ஆசியான் வட்டாரத்தில் பதற்றங்களை முடிவுக்குக் கொண்டு வந்து அமைதி மற்றும் நிலைத்தன்மையைப் பேணுவதற்குக் கம்போடியாவும் தாய்லாந்தும் உரையாடல் மற்றும் பரஸ்பர மரியாதை ஆகியவற்றைக் கடைப்பிடிப்பது அவசியம் என்று பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் வலியுறுத்தினார்.
கம்போடியாவிற்கும் தாய்லாந்திற்கும் இடையிலான பதற்றங்களைக் குறைப்பதற்கான சிறந்த வழியைப் பற்றி விவாதிக்கவும் கருத்துகளைப் பரிமாறிக் கொள்ளவும் அவ்விரு நாடுகளின் பிரதமர்களுடன் தொலைபேசியில் இது குறித்து கலந்துரையாடப்பட்டதாகத் தமது முகநூல் பதிவில் டத்தோ ஶ்ரீ அன்வார் குறிப்பிட்டுள்ளார்.
இரு நாடுகளும் வெளிப்படையாகப் பேச்சுவார்த்தை நடத்தவும் அமைதியான முறையில் வேறுபாடுகளைக் களையவும் நியாயமான மற்றும் நிலையான தீர்வை அடைவதற்கும் பொருத்தமான கூட்டமாக நாளை நடைபெறவுள்ள ஆசியான் வெளியுறவு அமைச்சர்களுக்கான கூட்டம் அமையும் என்று அவர் தெரிவித்தார்.
இச்சந்திப்பு ஆசியான் நாடுகள் ஒன்றிணைந்து விவாதிக்கவும் சம்பவ இடத்தில் உண்மைகளை உறுதிப்படுத்தவும் இரு தரப்பினரும் சண்டையை நிறுத்தத்தை நிறுத்துவதற்கான முயற்சிகளைத் தீவிரப்படுத்தவும் உடனடி போர்நிறுத்தத்துடன் தொடங்கவும் உதவும் என்று அன்வார் டிசம்பர் 17ஆம் தேதி தெரிவித்திருந்தார்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)