Ad Banner
Ad Banner
 பொது

2026-இல் தேசிய முன்னணி உச்சமன்ற கூட்டத்தில் விவாதிக்கப்படும் விவகாரங்களில் மஇகா-வின் நிலையும் அடங்கும்.

20/12/2025 04:59 PM

சிலாங்கூர் டிசம்பர் 20 (பெர்னாமா) -- அடுத்த ஆண்டு தேசிய முன்னணி உச்சமன்ற கூட்டத்தில் விவாதிக்கப்படும் விவகாரங்களில் மஇகா-வின் நிலையும் அடங்கும்.

2026-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் நடைபெற திட்டமிடப்பட்டிருக்கும் 2025-ஆம் ஆண்டு அம்னோ பொதுப் பேரவையின் நிகழ்ச்சிநிரலில் இணைக்கப்படவில்லை என்று தேசிய முன்னணி தலைவரும் துணைப் பிரதமருமான டத்தோ ஶ்ரீ டாக்டர் அஹ்மாட் சாஹிட் ஹமிடி கூறினார்.

''அதற்கும் பொதுப் பேரவைக்கும் சம்பந்தம் இல்லை. ஏனெனில், தேசிய முன்னணியில், அம்னோ மற்றும் மஇகா-வின் நிலை ஒன்றுதான். அடுத்த ஆண்டு ஜனவரியில், தேசிய முன்னணி உச்சமன்ற கூட்டம் நடைபெறும், அதில் நாம் முடிவு செய்வோம்.'' என்றார் டத்தோ ஶ்ரீ டாக்டர் அஹ்மாட் சாஹிட் ஹமிடி 

முன்னதாக, மஇகாவின் 79-வது பொதுப் பேரவையில் தேசிய முன்னணியில் இருந்து அக்கட்சி வெளியேறுவதா அல்லது தொடர்ந்து நீடிப்பதா எனும் முடிவை ஒத்திவைக்க முடிவு செய்ததாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன.

இருப்பினும், தேசிய முன்னணியில் இருந்து வெளியேறுவது குறித்த முடிவு ஏற்றுக் கொள்ளப்பட்டு பரிசீலனைக்காக மத்திய செயலவையிடம் ஒப்படைத்து விட்டதாக மஇகா தலைவர் டான் ஸ்ரீ ச.விக்னேஸ்வரன் கூறியிருந்தார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)