Ad Banner
Ad Banner
 பொது

30 கோடி ரிங்கிட்டாக இருந்த பூமிபுத்ரா கடனுதவி நிதி 50 கோடி ரிங்கிட்டாக அதிகரிக்கப்படும்

18/12/2025 05:57 PM

புத்ராஜெயா, டிசம்பர் 18 (பெர்னாமா) -- தேசிய வணிகக் குழு பொருளாதார நிதியத்தின் கீழ், இவ்வாண்டு 30 கோடி ரிங்கிட்டாக இருந்த பூமிபுத்ரா கடனுதவி நிதி, அடுத்த ஆண்டில் 50 கோடி ரிங்கிட்டாக அதிகரிக்கப்படும்.

இனங்களைக் கடந்து, சிறு, குறு, நடுத்தர நிறுவனங்கள் மற்றும் கூட்டுறவுக் கழகங்களை வலுப்படுத்தும் கொள்கையாகவும் அது விளங்கும் என்று தொழில்முனைவோர் மற்றும் கூட்டுறவு மேம்பாட்டு அமைச்சர், ஸ்டிவன் சீம் தெரிவித்தார்.

தெக்கூன் திட்டத்தின் கீழ் பூமிபுத்ரா கடனுதவி நிதி இந்த ஆண்டு 30 கோடி ரிங்கிட்டில் இருந்து அடுத்த ஆண்டு 2026-இல் 50 கோடி ரிங்கிட்டாக உயர்த்தப்படும்.
இந்திய தொழில்முனைவோர் கடனுதவி திட்டம் அல்லது எஸ்.பி.யு.எம்.ஐ மூலம் இந்திய தொழில்முனைவோருக்கான கடனுதவி, 3 கோடி ரிங்கிட்டில் இருந்து அடுத்த ஆண்டு 5 கோடி ரிங்கிட்டாக அதிகரிக்கப்படும். மேலும் அடுத்த ஆண்டு ஜனவரியில் தொடங்கப்படும் 5 கோடி ரிங்கிட் கடனுதவி, சீன சமூக சிறு மற்றும் நடுத்தர தொழில்துறையினருக்கு அறிமுகப்படுத்தப்படும்,'' என ஸ்டிவன் சீம் கூறினார்.

இன்று புத்ராஜெயாவில், நடைபெற்ற தொழில்முனைவோர் மற்றும் கூட்டுறவு மேம்பாட்டு அமைச்சின் உயர் நிர்வாகத்தின் விளக்கமளிப்பை செவிமடுத்த பின்னர், ஸ்டிவன் சீம் அவ்வாறு கூறினார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)