தெலுங்கானா, டிசம்பர் 17 (பெர்னாமா) -- ஆஸ்திரேலியாவின் போண்டி கடற்கரையில் ஞாயிற்றுக்கிழமை துப்பாகிச் சூடு நடத்தி போலீசாரால் சுட்டுக் கொல்லப்பட்டதாகக் கூறப்படும் ஆடவர் தென்னிந்திய நகரமான ஹைதராபாத்தைச் சேர்ந்தவர் ஆவர்.
அவர் தீவிரவாத மனநிலையில் இருந்தது அவரின் குடும்பத்தினருக்குத் தெரியாது என்று இந்திய போலீசார் தெரிவித்தனர்.
ஹனுக்கா நிகழ்வின்போது 15 பேர் கொல்லப்பட்ட இத்தாக்குதல் கிட்டத்தட்ட 30 ஆண்டுகளில் ஆஸ்திரேலியாவின் மிக மோசமான துப்பாக்கிச் சூட்டு சம்பவமாகக் கூறப்படுகிறது.
தனது மகனுடன் சேர்ந்து தாக்குதலை நடத்தியதாகக் கூறப்படும் 50 வயதான சஜித் அக்ரம் தெலுங்கானாவில் வணிகத்துறையில் தமது இளங்கலை படிப்பை முடித்துள்ளார்.
பின்னர் அக்ரம் 1998ஆம் ஆண்டு நவம்பரில் வேலை தேடி ஆஸ்திரேலியாவுக்குச் சென்று ஐரோப்பிய வம்சாவளியைச் சேர்ந்த ஒரு பெண்ணை மணந்தார்.
அவர்களுக்கு ஒரு மகனும் ஒரு மகளும் உள்ளனர்.
சொத்து விவகாரங்கள் மற்றும் பெற்றோரைப் பார்ப்பது போன்ற குடும்பம் தொடர்பான காரணங்களுக்காக அவர் ஆறு முறை இந்தியாவுக்குச் சென்றுள்ளார்.
அக்ரமின் குடும்பத்தினருக்கு அவரின் தீவிரவாத செயல் பற்றித் தெரியாது என்றும் இந்தியாவுடன் அச்செயலுக்கு எவ்விதத் தொடர்பும் இல்லை என்றும் கூறிய போலீசார் 1998ஆம் ஆண்டில் நாட்டை விட்டு வெளியேறுவதற்கு முன்னர் அவர் மீது எந்த எதிர்மறையான பதிவும் இல்லை என்று குறிப்பிட்டுள்ளனர்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)