கோலாலம்பூர், டிசம்பர் 17 (பெர்னாமா) -- முதல் நிலையிலான மூன்று அனைத்துலக காற்பந்து ஆட்டங்களில் தகுதியற்ற ஆட்டக்காரர்களைக் களமிறக்கியதற்காக அனைத்துலக காற்பந்து சம்மேளனம் பிஃபா ஒழுங்குக் குழு மலேசிய காற்பந்து அணிக்குத் தண்டனை வழங்கியுள்ளது.
தகுதியற்ற ஆட்டக்காரர்களைக் கொண்டு அவ்வணி வெற்றி பெற்ற போதிலும் குறிப்பிட்ட அந்த மூன்று ஆட்டங்களிலும் மலேசியா 0-3 என தோல்வி கண்டதாக பிஃபா அறிவித்துள்ளது.
கடந்த மே 29-வ்ஆம் தேதி கோலாலம்பூர் காற்பந்து அரங்கில் வியட்நாமின் கேப் வெர்டேவுக்கு எதிராக மலேசியா சந்தித்த ஆட்டம் 1-1 என சமநிலையில் முடிந்தது.
அதனைத் தொடர்ந்து செப்டம்பர் 4ஆம் தேதி புக்கிட் ஜாலில் அரங்கில் நடந்த ஆட்டத்தில் ஹரிமாவ் மலாயா 2-1 சிங்கப்பூரை வீழ்த்தியது அடுத்ததாகச் செப்டம்பர் 8ஆம் தேதி நடந்த ஆட்டத்தில் அது பாலஸ்தீனத்தை 1-0 என்ற நிலையில் தோல்வி அடையச் செய்தது.
குறிப்பிடப்பட்ட இந்த ஆட்டங்களில் மலேசியாவின் வெற்றி செல்லாது என்று பிஃபா ஒழுங்குமுறைக் குழுவின் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டு அறிவிக்கப்பட்டது.
0-3 என்ற கணக்கில் மலேசியா தோல்வியடைந்ததாக அறிவிக்கப்பட்டது மட்டுமல்லாமல் எஃப்.ஏ.எம்முக்கு 51,414 ரிங்கிட் அபராதமும் விதிக்கப்பட்டது.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)