இஸ்தானா நெகாரா, டிசம்பர் 17 (பெர்னாமா) -- சாரா கைரினா மஹாதிர் மகாதீரின் மரண விசாரணை செயல்முறைக்கான செலவுகளைச் சமாளிக்க Justice for Zara நிதி நிர்வாகத்தில் எந்த நிதியும் தவறாகப் பயன்படுத்தப்படவில்லை என்பதை மத விவகாரங்களுக்கான பிரதமர் துறை துணை அமைச்சர் மர்ஹாமா ரோஸ்லி உறுதிப்படுத்தினார்.
Justice For Zara இயக்கத்தைத் தொடங்கிய ஆர்வலராக அந்நிதியின் கணக்கு முழுமையாகப் பிரிக்கப்பட்டதோடு தாம் தலைமையேற்கும் அரசு சாரா நிறுவனங்களின் கணக்குகளுடன் இணைக்கப்பட்டதில்லை என்றும் மர்ஹாமா தெளிவுப்படுத்தினார்.
''ஜஸ்டிஸ் ஃபோர் சாராவிற்கான இந்த வங்கிக் கணக்கு, எங்கள் மற்ற அரசு சாரா நிறுவன நடவடிக்கைகளுக்கான கணக்குகளுடன் இணைக்கப்பட்டதில்லை. அது தனிப்பட்ட ஒன்றுதான். நாங்கள் அதை உருவாக்கினோம். மேலும் இந்தக் கணக்கில் சாராவின் வாரிசாக அவரது தாயார் உள்ளார். சில வழக்கறிஞர்கள் அவரின் தாயாரின் வழக்கறிஞர் மற்றும் அரசு சாரா நிறுவனத்தின் செயற்குழு உட்பட. அதன் வங்கி கணக்கின் வாரிசு விவகாரத்தில் நான் ஒருபோதும் தலையிட்டதில்லை'', என்றார் மர்ஹாமா ரோஸ்லி.
இன்று காலை மணி 9 நிலவரப்படி அந்த நிதியின் கீழ் சேகரிக்கப்பட்ட மொத்த தொகை 2 லட்சத்து 54 ஆயிரத்து 995 ரிங்கிட் 92 சென் என்றும் தற்போதைய இருப்பு 96 ஆயிரத்து 59 ரிங்கிட் 97 சென் இருப்பதாக அந்நிதியின் அண்மைய தணிக்கை அறிக்கையையும் மர்ஹாமா வெளியிட்டார்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)