Ad Banner
Ad Banner
 பொது

ஶ்ரீ பெர்லிஸ் 2 அடுக்குமாடி குடியிருப்பின் வளர்ச்சி குறித்து சந்திப்பு நடத்த திட்டம்

13/12/2025 05:42 PM

ஜாலான் டத்தோ கிராமாட், டிசம்பர் 13 (பெர்னாமா) -- கோலாலம்பூர், தாமான் டத்தோ கெராமாட்டில் உள்ள ஶ்ரீ பெர்லிஸ் 2 அடுக்குமாடி குடியிருப்பின் வளர்ச்சி நிலையை உறுதிப்படுத்த கூட்டரசு பிரதேசத்திற்கான பிரதமர் துறை அமைச்சர் டத்தோ ஶ்ரீ டாக்டர் சாலிஹா முஸ்தபாவுடன் தாம் சந்திப்பு நடத்தவுள்ளதாகத் தோட்டம் மற்றும் மூலப்பொருள் அமைச்சர் டத்தோ ஶ்ரீ ஜொஹாரி அப்துல் கானி கூறினார்.

அச்சந்திப்பில் எந்தவொரு பொது வீட்டுவசதி மேம்பாட்டு திட்டங்களும் தேவை என்றால் அவை உள்ளூர் மக்களின் நலன் மற்றும் தேவைகளைக் கருத்தில் கொள்ளப்படும் என்று டத்த ஜொஹாரி தெரிவித்தார்.

''குடியிருப்பாளர்கள் பயத்தில் வாழ்வதாக எனக்கு தெரிவித்தனர். ஏனென்றால், சாத்தியமான இடமாற்றம் குறித்து பல்வேறு வதந்திகளைக் கேட்கின்றனர் மற்றும் மறுவடிவமைப்பில் ஆர்வமுள்ள மேம்பாட்டாளர்களின்'', என்றார் டத்தோ ஶ்ரீ ஜொஹாரி அப்துல் கானி.

இதனிடையே எந்தவொரு மேம்பாட்டு திட்டமும் கோலாலம்பூர் மாநகராண்மை கழகம் DBKL தொடர்புடைய அமைச்சுகள் மற்றும் சம்பந்தப்பட்ட பகுதிகளில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிகளை உள்ளடக்கிய விவாதங்களுக்கு உட்படுத்தப்பட வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)