Ad Banner
Ad Banner
 உலகம்

சிரமத்தை எதிர்நோக்கும் அகதிகள் முகாம்களில் தங்கியிருக்கும் கம்போடியர்கள்

12/12/2025 04:58 PM

கம்போடியா, 12 டிசம்பர் (பெர்னாமா) -- டிசம்பர் ஏழாம் தேதி மீண்டும் தொடங்கிய கம்போடிய - தாய்லாந்து மோதலினால், ப்ரேயா விஹேர் மாவட்டத்தில் உள்ள அகதிகள் முகாம்களில் தங்கியிருக்கும் கம்போடிய மக்கள் தற்போது சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.

பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் அதிகத் தொலைவில் அமைக்கப்பட்டுள்ள இம்முகாம்களின் எண்ணிக்கையும் கொள்ளளவும், இதற்கு முன்னரை காட்டிலும் இம்முறை அதிகரித்துள்ளன.

கம்போடிய - தாய்லாந்து எல்லையிலிருந்து சுமார் 100 கிலோமீட்டர் தொலைவில் உள்ள  ப்ரேயா விஹேர் மாவட்டத்தில் எட்டு முகாம்கள் அமைக்கப்பட்டிருக்கும் நிலையில், ஏறத்தாழ ஒரு மாவட்டத்தில் வசிக்கக்கூடிய மக்கள் அதாவது 40,000-க்கும் அதிகமானோர் அங்கு தஞ்சமடைந்துள்ளனர்.

இம்முகாம்களில் அரிசி மற்றும் பிற உணவுப் பொருள்கள் தினசரி விநியோகிக்கப்பட்டாலும், விரைவாக வறண்டு போகக்கூடிய தற்காலிக கிணறுகளிலிருந்து மட்டுமே தண்ணீர் கிடைக்கிறது.

இம்மோதல் தொடர்ந்தால், அங்கு தங்கியிருப்பவர்கள் கடுமையான பற்றாக்குறையை எதிர்நோக்கக்கூடும்.

-- பெர்னாமா 

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)