தாப்பா, 09 டிசம்பர் (பெர்னாமா) -- தைப்பிங்கின், தெக்கா விமான நிலையத்திற்கு அருகில் உள்ள பகுதியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை அவசரமாக தரையிறங்கிய மைக்ரோலைட் ரக சிறிய விமானம், எம்.எஸ்.ஏ.எஃப் எனப்படும் மலேசிய ஆகாய விளையாட்டு சம்மேளனத்திற்கு சொந்தமானது என்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதில் தொடர்புடைய விமானியும் பயிற்சியாளரும் அச்சம்மேளனத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ளதும் கண்டறியப்பட்டதாக பேராக் போலீஸ் தலைவர் டத்தோ நோர் ஹிஷாம் நோர்டின் தெரிவித்தார்.
இன்று, பேராக், தாப்பா மாவட்ட போலீஸ் தலைமையகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டப் பின்னர் டத்தோ நோர் ஹிஷாம் நோர்டின் செய்தியாளர்களிடம் இத்தகவல்களைப் பகிர்ந்து கொண்டார்.
இச்சம்பவம் குறித்து, நேற்று முன்தினம் காலை மணி 10.30 அளவில் தங்களுக்கு தகவல் கிடைத்தாக தைப்பிங் மாவட்ட போலீஸ் தலைவர் ஏ.சி.பி முஹமட் நாசிர் இஸ்மாயில் நேற்று கூறியிருந்தார்.
அதில், காயமடைந்த 46 வயது விமானியும் மற்றும் 40 வயது பயிற்சியாளரும் தைப்பிங் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
--பெர்னாமா
[பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)]