பாசிர் மாஸ், 09 டிசம்பர் (பெர்னாமா) -- கடந்த இரு வாரங்களுக்கு முன்னர், ஒரு சிறுமியிடம் இயற்கைக்கு எதிரான பாலியல் உறவு மற்றும் துன்புறுத்தலை மேற்கொண்டதாக உயர்க்கல்வி மாணவர் ஒருவர் இன்று, ஜெலி செஷன்ஸ் நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டார்.
நீதிபதி சுல்கிப்லி அப்துல்லா முன்னிலையில் வாசிக்கப்பட்ட அவ்விரு குற்றச்சாட்டுகளையும், 21 வயதான முஹமட் யுஷாக்கிமி ஜமாலுடின் மறுத்து விசாரணைக் கோரினார்.
கடந்த நவம்பர் 29-ஆம் தேதி மாலை மணி 2.30 அளவில், ஜெலி, லதா ஜங்குட் கார் நிறுத்துமிடத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பெரோடுவா மைவி ரக காரில் 17 வயதுடைய சிறுமியிடம் முஹமட் யுஷாக்கிமி அவ்விரு குற்றங்களையும் புரிந்ததாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
குற்றங்கள் நிரூபிக்கப்பட்டால், அதிகபட்சம் 20 ஆண்டுகள் சிறை மற்றும் பிரம்படி விதிக்க வகைச் செய்யும் குற்றவியல் சட்டம் செக்ஷன் 377A-வின் கீழ் குற்றம் சுமத்தப்பட்ட நிலையில், அதேச் சட்டம் செக்ஷன் 377B-இன் கீழ் தண்டனை விதிக்கப்படும்.
அந்நபர், 10,000 ரிங்கிட் ஜாமின் மற்றும் தனிநபர் ஒருவரின் உத்தரவாதத்தின் பேரில் விடுவிக்கப்பட்ட நிலையில், இவ்வழக்கின் மறுசெவிமடுப்பு அடுத்தாண்டு ஜனவரி 11-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
--பெர்னாமா
[பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)]