கோலாலம்பூர், டிசம்பர் 06 (பெர்னாமா) -- காலியாக உள்ள அமைச்சர் பதவிகளின் புதிய நியமனங்கள் உட்பட எந்தவோர் அமைச்சரவை மறுசீரமைப்பும் நாட்டின் நிர்வாக அமைப்பில் குறிப்பிடப்பட்டுள்ளபடி பிரதமரின் விருப்புரிமை மற்றும் தனிச்சிறப்புக்கு உட்பட்டதாகும்.
உயர்க்கல்வி அமைச்சில் தமது பதவி உட்பட அமைச்சரவை மாற்றங்கள் குறித்து அண்மையில் எழுந்துள்ள ஆருடங்கள் குறித்து கருத்துரைத்த அதன் அமைச்சர்டத்தோ ஶ்ரீ டாக்டர் சம்ரி அப்துல் காடிர் அவ்வாறு கூறினார்.
நேற்றிரவு 2025 உயர்க்கல்வி அமைச்சின் ஊடக பாராட்டு விழாவில் உரையாற்றிய டத்தோ ஶ்ரீ டாக்டர் சம்ரி அவ்வாறு குறிப்பிட்டார்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)