Ad Banner
Ad Banner
 பொது

WCE நெடுஞ்சாலை திட்டம்: கிள்ளான், கம்போங் ஜாவா குடியிருப்பு பகுதிகள் எவ்வித அசம்பாவிதமின்றி அகற்றப்பட்டன

02/12/2025 06:23 PM

ஷா ஆலம், டிசம்பர் 02 (பெர்னாமா) -- செக்‌ஷன் 3, WCE எனும் மேற்கு கடற்கரை நெடுஞ்சாலை திட்டத்திற்காகக் கிள்ளான், கம்போங் ஜாவா குடியிருப்பு பகுதிகளை முற்றிலும் அகற்றும் நடவடிக்கை கட்டுப்பாட்டில் இருந்ததோடு எவ்வித அசம்பாவிதங்களும் இன்றி சீராக மேற்கொள்ளப்பட்டது.

இன்று காலை தொடங்கிய அந்நடவடிக்கையின்போது பொது மக்கள் போலீசாருக்கு நல்ல ஒத்துழைப்பு வழங்கிய நிலையில் பொது அமைதி கட்டுப்பாட்டிற்காகப் போதுமான உறுப்பினர்களையும் போலீசார் ஏற்பாடு செய்திருந்ததாகச் சிலாங்கூர் போலீஸ் தலைவர் டத்தோ ஷாசெலி கஹார் தெரிவித்தார்.

''தென் கிள்ளானின் ஓ.சி.பி.டியும் இங்கே உள்ளார். அவர் இங்கே இருக்கும்போது நிலைமைக் கட்டுப்பாட்டில் உள்ளது. மக்களின் ஒத்துழைப்பிற்கு நன்றி. பணியை மேற்கொள்ளும் அதிகாரிகள் பணியின் நோக்கத்தைப் புரிந்து கொண்டதற்கு நன்றிக் கூற விரும்புகிறேன். இப்போது வரை சொல்லவே வேண்டாம். அது நடக்காமல் இருக்க பிரார்த்திக்கிறேன். போலீஸ் எப்போதும் தகுந்த மற்றும் போதுமான தயாரிப்புகளைச் செய்கிறது,'' என்றார் டத்தோ ஷாசெலி கஹார்.

இன்று சிலாங்கூர் வணிக குற்றப் புலனாய்வுத் துறையில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் ஷாசெலி கஹார் அத்தகவல்களைப் பகிர்ந்துக் கொண்டார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)

 KEYWORDS
 தொடர்புடைய செய்திகள்
 பரிந்துரை