ஜாலான் பார்லிமன், 2 டிசம்பர் (பெர்னாமா) -- அண்மையில், பல மாநிலங்களில் ஏற்பட்ட வெள்ளப் பேரிடரில் சேதமடைந்த பொது உள்கட்டமைப்புகளைச் சீரமைப்பதற்காக, அரசாங்கம் 50 கோடி ரிங்கிட் நிதியை ஒதுக்கியுள்ளது.
சேதங்களை மதிப்பீடுச் செய்து பழுதுபார்க்கும் பணிகளை உடனடியாகச் செயல்படுத்துமாறு, மாநில மற்றும் மத்திய அரசாங்கங்களின் கீழ் உள்ள அனைத்துத் துறைகளுக்கும் தாம் உத்தரவிட்டுள்ளதாக பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்தார்.
''இதில் பள்ளிகள், சிகிச்சையகங்கள், அடிப்படை வசதிகள் மற்றும் சாலைகள் அடங்கும். மேலும் அதை விரைவுபடுத்த வேண்டும். எனவே வெள்ள சேதத்தை சரிசெய்ய 50 கோடி ரிங்கிட் ஒதுக்கீட்டை நான் அங்கீகரித்தேன்,'' டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் கூறினார்.
இன்று, மக்களவையில் 2026-ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டச் சட்ட மசோதாவின் இரண்டாம் வாசிப்பை தாக்கல் செய்தபோது பிரதமர் அதனைக் கூறினார்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)