Ad Banner
Ad Banner
Ad Banner
 பொது

14 மாநிலங்களில் செயல்பாட்டுக் கட்டுப்பாட்டு மையங்கள்

28/11/2025 05:41 PM

புத்ராஜெயா , நவம்பர் 28 (பெர்னாமா) -- சிலாங்கூர் மற்றும் நெகிரி செம்பிலான் இடையிலான கடலோரப் பகுதிகளில் நேற்று நள்ளிரவு மணி 12.30-க்கு கரையைக் கடந்த SENYAR வெப்பமண்டல புயலைத் தொடர்ந்து, 14 மாநிலங்களில், மாநில செயல்பாட்டுக் கட்டுப்பாட்டு மையங்களையும், 198 மாவட்ட செயல்பாட்டுக் கட்டுப்பாட்டு மையங்களையும் அரசாங்கம் முழுமையாக செயல்படுத்தியுள்ளதாக, துணைப் பிரதமர் டத்தோ ஶ்ரீ டாக்டர் அஹ்மாட் சாஹிட் ஹமிடி தெரிவித்தார்.

இப்புயலின் தாக்கம் தணிந்திருந்தாலும், தீபகற்பத்தில் இன்னும் 24 மணி நேரத்திற்கு தொடர் மழை பெய்யும் வாய்ப்பு இருப்பதால் இந்நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதை அவர் சுட்டிக்காட்டினார்.

மக்கள் மற்றும் அதிகப் பாதிப்பை எதிர்நோக்கக்கூடிய உள்கட்டமைப்புகளில் வானிலையின் தாக்கம் குறித்து, மலேசிய வானிலை ஆய்வு மையம், மெட்மலேசியா, தேசிய பேரிடர் நிர்வகிப்பு நிறுவனம், நட்மா மற்றும் மலேசிய பொதுத் தற்காப்புப் படை, APM-இடமிருந்து பெற்றதாக டத்தோ ஶ்ரீ டாக்டர் அஹ்மாட் சாஹிட் ஹமிடி கூறினார்.

செயல்பாட்டு ஒருங்கிணைப்பு, பாதிக்கப்பட்டவர்களை இடமாற்றும் நடவடிக்கை, தகவல்களை வழங்குதல் ஆகியப் பணிகள் தாமதமின்றி மேற்கொள்ளப்படுவதை உறுதி செய்யும் பொருட்டு, மாநில மற்றும் மாவட்ட அளவில் பேரிடர் செயல்பாட்டுக் கட்டுப்பாட்டு மையங்களும் திறக்கப்பட்டுள்ளதாக, மத்திய பேரிடர் நிர்வகிப்புச் செயற்குழுத் தலைவருமான அவர் மேலும் விவரித்தார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)