சிபோல்கா, 27 நவம்பர் (பெர்னாமா) -- மற்றொரு நிலவரத்தில், தென்கிழக்கு ஆசியா கடும் வெள்ளத்தில் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இந்தோனேசியாவின் வடக்கு சுமத்ரா மாகாணத்தில் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை குறைந்தது 24-ஆக அதிகரித்துள்ளது.
இந்தோனேசியாவின் சுமத்ரா தீவைக் கடந்து வீசிய வெப்பமண்டல சூறாவளியினால் பெய்த கனமழை மற்றும் அருகிலுள்ள மலாக்கா நீரிணை நிரம்பி வழிந்தது.
இதனால் வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகள் ஏற்பட்டதாக அந்நாட்டின் வானிலை ஆய்வு மையம் புதன்கிழமை குறிப்பிட்டுள்ளது.
இச்சம்பவத்தில் ஐவர் காணாமல் போயிருக்கின்றனர்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)