கோலாலம்பூர், 24 நவம்பர் (பெர்னாமா) -- அதிக மதிப்புடைய பொருள்களுக்கான வரி ரத்து செய்யப்பட்டிருந்தாலும் ஆடம்பரப் பொருள்களுக்கான வரி தொடர்ந்து விதிக்கப்பட்டு வரும் நிலையில் அத்தியாவசியமற்ற பொருட்களை உட்படுத்தி விற்பனை மற்றும் சேவை வரி எஸ்.எஸ்.டி-ஐ அரசாங்கம் விரிவுபடுத்துகிறது.
வசதி படைத்தவர்களை மட்டும் முன்னிறுத்தியே வரி வசூலிப்பு கவனம் செலுத்தப்படுவதை இந்நடவடிக்கை காட்டுவதாக நிதி துணை அமைச்சர் லிம் ஹுய் இங் தெரிவித்தார்.
''நாட்டின் நிதி நிலைமையை வலுப்படுத்துவதில் அரசாங்கம் எப்போதும் உறுதியாக உள்ளது. அதேவேளையில், மக்களின் நலன் பராமரிக்கப்படுவதையும் உறுதி செய்கிறது. எனவே, பங்குதாரர்களுடன் ஈடுபாட்டை உள்ளடக்கி வரி நடவடிக்கைகள் கவனமாக செயல்படுத்தப்படுகின்றன,''
என்றார் லிம் ஹுய் இங்
இன்று மக்களவையில் டுங்குன் நாடாளுமன்ற உறுப்பினர் வான் ஹஸ்ஸன் மொஹ்த் ரம்லி எழுப்பிய கேள்விக்கு அவர் அவ்வாறு பதிலளித்தார்.
இதனிடையே, HVGT-இன் கீழ் ஆடம்பரப் பொருட்களாகக் கருதப்படுவதை ஒவ்வொன்றாகத் தீர்மானிப்பதைக் காட்டிலும் அத்தியாவசியமற்ற பொருட்களுக்கு வரி விதிக்கும் முறையை எளிமையாக செயல்படுத்திவிடலாம் என்று லிம் மேலும் கூறினார்.
பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)