கோலாலம்பூர், 23 நவம்பர் (பெர்னாமா) -- கிளந்தானில் உள்ள ஐந்து மாவட்டங்கள், வரும் செவ்வாய்க்கிழமை வரை ஆபத்தான அளவில் தொடரும் கனமழையை எதிர்கொள்ளும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
தும்பாட், பாசிர் மாஸ், கோத்தா பாரு, பாச்சோக் மற்றும் பாசீர் புத்தே ஆகிய ஐந்து மாவட்டங்களே இதில் பட்டியலிப்பட்டுள்ளன.
பெர்லிசில் தொடர் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டிருக்கும் வேளையில்....
லங்காவி, கூபாங் பாசு, கோத்தா செதார், போக்கே செனா, பாடாங் திராப், பெண்டாங், சீக், பாலிங் , ஊலு பேராக் ஆகிய இடங்களிலும் அதே நிலை நீடிக்கும் என்று மலேசிய வானிலை ஆய்வு மையம் இன்று காலை வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளது.
மேலும், ஜெலி, தானா மேரா, மாச்சாங், கோலா கிராய், பெசுட், செத்தியூ, கோலா நெருஸ், உலு திரெங்கானு, கோலா திரெங்கானு, மாராங் மற்றும் டுங்குன் மாவட்டங்களிலும் கன மழைக்கான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அதேவேளையில், கெடாவின் யான், கோலா மூடா, கூலிம், பண்டார் பாரு, உட்பட பேராக்கில், கெரியான்,லாரூட் மத்தாங், செலாமா, கோலா கங்சார்,மஞ்சோங், மஞோங், கிந்தா, பேராக், பாத்தாங் பாடாங் மற்றும் முவாலிம் ஆகிய இடங்களில் வரும் நவம்பர் 24 ஆம் தேதி தொடர் மழை பெய்யும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)