Ad Banner
Ad Banner
 பொது

கிளந்தானில் மூன்று மாவட்டங்களில் தொடர் மழைக்கான எச்சரிக்கை

22/11/2025 05:17 PM

கோத்தா பாரு , 22 நவம்பர் (பெர்னாமா) -- நேற்று வெள்ளிக்கிழமை தொடங்கி வரும் நவம்பர் 26ஆம் தேதி வரை தொடர் மழைக்கான எச்சரிக்கை விடுக்கப்பட்டதைத் தொடர்ந்து, கிளந்தானில் பாசிர் மாஸ், பாசிர் பூத்தே மற்றும் கோத்தா பாரு ஆகிய மாவட்டங்கள் பருவமழை வெள்ளத்தை எதிர்நோக்க நேரிடும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

கனமழை தொடர்ந்தால் மூன்று முக்கிய ஆறுகளின் நீர் மட்டம் உயர்வதற்கான அபாயம் இருப்பதாக நீர்ப்பாசனம் மற்றும் வடிகால் துறை, JPS இன்று வெளியிட்ட ஓர் அறிக்கையின் வாயிலாக தெரிவித்தது.

பாசிர் மாஸில் கிளந்தான் ஆறு, பாசிர் பூத்தேவில் செமாராக் ஆறு மற்றும் கோத்தா பாருவில் கெமாசின் ஆறு ஆகியவை இதில் அடங்கும்.

தொடர்ந்து மழை பெய்தால், வெள்ள எச்சரிக்கைகளை அவ்வப்போது கண்காணிக்கவுள்ளதாகவும் ஜே.பி.எஸ் தெரிவித்தது.

கணிக்கப்பட்ட தேதிக்கு முன்னதாகவோ அல்லது தாமதமாகவோ வெள்ளம் ஏற்படுவதற்கு சாத்தியம் இருப்பதாக ஜே.பி.எஸ் குறிப்பிட்டுள்ளது.

வெள்ளம் ஏற்படும் என்று கணிக்கப்பட்டிருக்கும் இடங்களில் முன்னெச்சரிக்கையாக இருக்கும்படி அனைத்து பேரிடர் நிர்வகிப்பு நிறுவனங்களும் பொது மக்களும் அறிவுறுத்தப்பட்டிருக்கின்றனர்.

--பெர்னாமா 

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)