எத்தியோப்பியா, 21 நவம்பர் (பெர்னாமா) -- வெளிநாட்டு விளையாட்டாளர்களைப் பதிவு செய்தது தொடர்பாக மலேசிய காற்பந்து சங்கம், எஃப்.ஏ.எம்-மில் எழுந்துள்ள பிரச்சனையை மறைக்க எந்த முயற்சியும் மேற்கொள்ளப்படவில்லை.
மாறாக, இந்த விவகாரம் முறையான நடைமுறைகளின்படி கையாள வேண்டிய ஒரு முக்கிய பிரச்சனை என்று பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் விவரித்தார்.
இந்த விவகாரம் குறித்து அமைச்சரவை விவாதித்ததாகவும், அதனை தற்காக்க எந்த முயற்சியும் மேற்கொள்ளப்படக் கூடாது என்று முடிவு செய்யப்பட்டதாகவும் பிரதமர் விளக்கினார்.
''இது எஃப்.ஏ.எம்-க்கு ஒரு பெரிய பிரச்சனை. நாங்கள் இதைப் பற்றி விவாதித்தோம், மறைக்க வேண்டாம் என்று நாங்கள் கூறினோம். தொடருங்கள். அதுதான் எங்களின் அறிவுறுத்தலாகும். ஆனால், செயல்முறை தொடர வேண்டும். உங்களுக்குத் தெரியும், ஃபிஃபா-வை மட்டுமே அடிப்படையாகக் கொண்டு நாம் செயல்பட முடியாது'', என்றார் அவர்.
வியாழக்கிழமை, எத்தியோப்பியாவிலிருந்து தென்னாப்பிரிக்காவுக்கு மெற்கொண்ட விமானப் பயணத்தின் போது அன்வார் மலேசிய ஊடகவியளாலர்களுடன் பேசினார்.
பிஃபாவின் நம்பகத்தன்மையை அரசாங்கம் கேள்விக்குள்ளாக்கவில்லை என்றும், இவ்விவகாரத்தில் இளைஞர் மற்றும் விளையாட்டு அமைச்சர் ஹன்னா யோவின் நிலைப்பாட்டை ஏற்றுக்கொள்வதாகவும் அவர் கூறினார்.
''இந்த விவகாரத்தில் ஃபிஃபா-வின் குற்றத்தை நாங்கள் மறுக்கவில்லை. ஆனால் ஹன்னா யோவின் நிலைப்பாடு சரியானது என்று நான் நினைக்கிறேன். அமைச்சின் தரப்பில், எஃப்.ஏ.எம் முதலில் தன்னை தற்காத்துக் கொள்ளட்டும். சைஃபுடின் பொறுத்தவரை, அவர் கடுமையான விதிகளைப் பின்பற்றுகிறார்'' என்று அவர் கூறினார்.
வெளிநாட்டில் ஆவணப்படுத்தும் செயல்முறை சரியாக மேற்கொள்ளப்பட்டதா என்பது குறித்தும் ஆராயப்பட வேண்டும் என்று அவர் கூறினார்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30
(ஆஸ்ட்ரோ 502)