Ad Banner
Ad Banner
Ad Banner
 பொது

செம்பனை பயிரீடு & தரமான விதைகளைப் பெறுவதற்கான அணுகலை வழங்க மலேசியா தயார்

20/11/2025 04:47 PM

அடிஸ் அபாபா, 20 நவம்பர் (பெர்னாமா) -- எத்தியோப்பியாவிற்கு ஏற்றுமதி செய்வதற்காகக் கோழி, உண்ணக்கூடிய பறவைக் கூடு மற்றும் கால்நடை தீவனம் போன்ற உற்பத்தி பொருட்கள் மட்டுமின்றி நிபுணத்துவம் மிக்க செம்பனை பயிரீடு மற்றும் தரமான விதைகளைப் பெறுவதற்கான அணுகலையும் வழங்க மலேசியா தயாராக உள்ளதாகப் பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்தார்.

புதன்கிழமை, அந்நாட்டு பிரதமர் டாக்டர் அபி அஹ்மட் அலியுடன் மேற்கொள்ளப்பட்ட இருதரப்பு சந்திப்பிற்குப் பின்னர் அந்நாட்டுச் சந்தையில் அதிகரித்துவரும் தேவையைக் கருத்தில் கொண்டு மலேசிய செம்பனை உற்பத்தி பொருட்களின் இறக்குமதி வரி விகிதங்களை மறுபரிசீலனை செய்யும்படியும் பிரதமர் வலியுறுத்தினார்.

மலேசிய தொழில்நுட்ப ஒத்துழைப்புத் திட்டம் MTCP வழியாக எத்தியோப்பியாவின் பொருளாதார சீர்திருத்த திட்டங்களுக்கு மலேசியாவின் தொடர்ச்சியான ஆதரவைத் தவிர்த்து, சுற்றுலா, கல்வி, சுகாதாரம், தொழில்நுட்பம் மற்றும் தொழில்திறன் பயிற்சி TVET மற்றும் ஆராய்ச்சி ஆகிய துறைகளில் ஒத்துழைப்பை வலுப்படுத்த கூட்டாக இணக்கம் தெரிவித்ததாகவும் பிரதமர் அன்வார் இப்ராஹிம் கூறினார்.

வழக்கமான ஆலோசனைப் இயங்குமுறையைத் தொடங்குவதற்கான ஒப்பந்தம் இரு நாட்டு மக்களுக்கும் இடையிலான ஒத்துழைப்பு, பரஸ்பர மேம்பாடு மற்றும் இணைப்புக்கான இடத்தை விரிவுப்படுத்தும் பல்வேறு முயற்சிகள் உள்ளிட்ட முன்னேற்றத்தை மலேசியா வரவேற்பதாக இன்று வெளியிட்ட ஓர் அறிக்கையில் நிதி அமைச்சருமான அன்வார் எடுத்துரைத்தார்.

இதனிடையே, செயற்கை நுண்ணறிவு, மின்னியல் உபரிப்பாக தொழில்துறை, உள்நாட்டு ஹாலால் தொழில்துறை, இணையப் பாதுகாப்பு துறை மற்றும் இரு நாடுகளின் வர்த்தக சபைகளுக்கு இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தம் கட்டமைப்பின் வழியான புதிய வாய்ப்புகளின் பெரும் ஆற்றலையும் அவர் சுட்டிக் காட்டினார்.

--பெர்னாமா 

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)