Ad Banner
Ad Banner
 பொது

மாணவர்களை உட்படுத்திய குற்றவியல் வழக்குகள்; கல்வி கழகங்களின் நற்பெயருக்கு களங்கம்

19/11/2025 05:16 PM

ஷா ஆலம், 19 நவம்பர் (பெர்னாமா) -- அண்மைய காலமாக, மாணவர்களை உட்படுத்திய கடுமையான குற்றவியல் வழக்குகள், அப்பிரிவினரிடையே நல்லொழுக்கம், மதம் மற்றும் குணநலன்களின் நிலை குறித்த அச்சத்தை ஏற்படுத்துவதாக மாட்சிமை தங்கிய மாமன்னர் சுல்தான் இப்ராஹிம் இன்று தெரிவித்துள்ளார்.

அதுபோன்ற வழக்குகள், நாட்டின் கல்வி கழகங்களின் நற்பெயருக்கும் களங்கம் விளைவித்திருப்பதாக மாரா தொழில்நுட்ப பல்கலைக்கழகம், UiTM-மின் வேந்தருமான சுல்தான் இப்ராஹிம் எடுத்துரைத்தார்.

பள்ளிகளும் கல்வி கழகங்களும் மனிதநேயம், ஒழுக்கம் மற்றும் உணர்ச்சி கட்டுப்பாடு போன்ற அம்சங்களை வலியுறுத்துவது மற்றும் சட்ட விழிப்புணர்வை ஏற்படுத்தும் கல்வி புரட்சியை மேற்கொள்ள வேண்டும் என்றும் சுல்தான் இப்ராஹிம் வலியுறுத்தினார்.

அப்பிரச்சனையைக் கையாளும் முயற்சிகள் வகுப்பறைக்கு அப்பாற்பட்ட ஒரு சமூகப் பொறுப்பாகும் என்றும் மாமன்னர் குறிப்பிட்டார்.

கல்வியும் நல்லொழுக்க சீர்த்திருத்தமும் வளாகத்திலோ அல்லது வகுப்பறையிலோ மட்டுமல்ல, அன்றாட வாழ்க்கையில் வீட்டிலிருந்தே தொடங்க வேண்டும். ஒவ்வொரு மனிதனுக்கும் வீடுதான் முதல் சமயப் பள்ளியாகும். நம் குழந்தைகள் சிறு வயதிலிருந்தே உன்னதமான நற்பண்புகள், கட்டொழுங்கு மற்றும் சமூகத்திற்கான பொறுப்பு ஆகியவற்றை பயிலும் இடம் அதுவாகும்.

இன்று, ஷா ஆலமில், UiTM-மின் 103-வது பட்டமளிப்பு விழாவில் உரையாற்றியபோது, சுல்தான் இப்ராஹிம் அவ்வாறு கூறினார்.

-- பெர்னாமா 

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)