Ad Banner
Ad Banner
 பொது

சபா மாநில தேர்தல்; 73 தொகுதிகளில் 74 சுயேட்சை வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்

15/11/2025 07:40 PM

சபா, 15 நவம்பர் (பெர்னாமா) -- 17வது சபா மாநிலத் தேர்தலில் 73 சட்டமன்றத் தொகுதிகளில் 74 சுயேட்சை வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.

கடந்த தேர்தலில் 56 சுயேட்சை வேட்பாளர்கள் மட்டுமே போட்டியிட்ட வேளையில் இம்முறை மொத்தம் 596 வேட்பாளர்கள் தங்கள் வேட்புமனுவைத் தாக்கல் செய்தனர்.

இம்முறை சபா மாநில தேர்தலில் சுயேட்சையாகப் போட்டியிடவிருக்கும் பிரபல அரசியல்வாதிகளில் கூடாட் நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோ வெர்டன் பஹாண்டாவும் சபா மக்கள் கூட்டணி கட்சியின் இளைஞர் பிரிவு முன்னாள் தலைவர் டத்தோ ஃபைருஸ் ரென்டன்னும் அடங்குவர்.

அவர்களைத் தவிர்த்து PGRS தொகுதி தலைவர் டத்தோ அவாங் அகமது சா சஹாரி பெதாகாஸ் சட்டமன்றத் தொகுதியைத் தற்காத்து சுயேட்சையாகப் போட்டியிடவுள்ளார்.

மேலும், துலிட் சட்டமன்றத் தொகுதியில் ஸ்த்தார் கட்சி இளைஞர் பிரிவு முன்னாள் தலைவர் ஜோர்டன் ஜூட் எல்ரான் போட்டியிடவுள்ளார்.

அதேவேளையில் குகுசான சட்டமன்றத் தொகுதியைத் தற்காத்து PHRS கட்சியின் முன்னாள் துணைத் தலைவர் டத்தோ ரினா ஜைனல் களம் காண்கிறார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)