லண்டன், 5 நவம்பர் (பெர்னாமா) -- இங்கிலாந்து காற்பந்து நட்சத்திரம் டேவிட் பேக்கமுக்கு சர் பட்டத்தை அளிக்கும் நைட்ஹூட் விருது வழங்கி சிறப்பிக்கப்பட்டது.
பல ஆண்டுகளாக விளையாட்டு மற்றும் தொண்டு பணிகளில் அவர் ஆற்றிய பெரும் பங்களிப்பை அங்கீகரிக்கும் விதமாக, பிரிட்டன் அரசர் சார்ல்ஸ, பேக்கமுக்கு SIR பட்டத்தை வழங்கினார். 20 ஆண்டுகளுக்கும் மேலாக காற்பந்து துறைக்கு ஆற்றிய சேவைக்காக, இங்கிலாந்தின் முன்னாள் கேப்டனான 50 வயது பெக்காம் இந்த அரச மரியாதையைப் பெற்றார்.
பட்டம் வழங்கும் நிகழ்ச்சியில் பேக்கம்-இன் மனைவி விக்டோரியா பெக்காம்-உம் கலந்து கொண்டார். பட்டம் வழங்கிய அரசர் சார்ல்ஸ, பேக்கம்-உடன் அன்பாக அளவலாவினார்.
சர் பட்டம் மற்றும் அரச அங்கீகாரம் குறித்து தாம் பெருமை கொள்வதாக பேக்கம் மகிழ்ச்சி தெரிவித்தார். லண்டனில் பிறந்த பேக்கம் 1995-ஆம் ஆண்டில் மான்செஸ்டர் யுனைடெட் கிளப்பில் இணைந்து விளையாடத் தொடங்கினார்.
இங்கிலாந்து அணியை பிரிதிநிதித்து 115 ஆட்டங்களில் விளையாடிய பேக்கம், 2013-ஆம் ஆண்டு காற்பந்து விளையாட்டியில் இருந்து ஓய்வு பெற்றார்.
பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)