Ad Banner
Ad Banner
 சிறப்புச் செய்தி

அரசாங்கம் ஆலயங்களுக்கு வழங்கப்படும் நிதி; சமூக நலனுக்கும் ஒதுக்குவீர் - குணராஜ்

04/11/2025 05:34 PM

கோலாலம்பூர், 04 நவம்பர் (பெர்னாமா) -- நாட்டின் மேம்பாட்டிற்கு ஏற்ப, இந்திய சமுதாயத்தின் வளர்ச்சிக்கும் நலனுக்கும், அரசாங்கம் பல்வேறு உதவிகளை வழங்கி வருவதோடு, அதன் சார்ந்த முயற்சிகளையும் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றது.

அந்த அடிப்படையில், நாட்டில் உள்ள ஆயிரம் ஆலயங்களுக்கு மடானி அரசாங்கம் வழங்கிய நிதியில் இருந்து 10 விழுக்காட்டை சமூக நலனுக்காக பயன்படுத்தலாம் என்று செந்தோசா சட்டமன்ற உறுப்பினர் குணராஜ் ஜோர்ஜ் ஆலோசனை தெரிவித்துள்ளார்.

DHARMA மடானி எனும் திட்டத்தின் கீழ், நாடு முழுவதும் உள்ள ஆயிரம் ஆலயங்களுக்கு இரண்டு கோடி ரிங்கிட் நிதியை மடானி அரசாங்கம் ஒதுக்கீடு செய்துள்ளது.

ஓர் ஆலயத்திற்கு தலா 20 ஆயிரம் ரிங்கிட் என்று மடானி அரசாங்கம் வழங்கிய இந்நிதியை ஆலயங்களுக்கான நிதி உதவியாக மட்டும் பாராமல், சமூக நலன் நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தினால் சமுதாயத்தின் எதிர்கால வளர்ச்சிக்கு பயனுள்ளதாக அமையும் என்று குணராஜ் ஜோர்ஜ் அறிவுறுத்தினார்.

“மிக முக்கியமான விஷயம். இந்த 20,000 ரிங்கிட்டில் ஓர் ஆலயம் 10 விழுக்காட்டை ஒதுக்கீடு செய்தால், 20 லட்சம் கிடைக்கும். ஓர் அறவாரியத்திற்கு இந்தத் தொகையை கொடுத்து ஒரு சமூக நடவடிக்கைகள் செய்யலாம். இது ஓர் ஆலோசனை. 2026-இல் தொடங்குவோம்,“ என்றார் அவர்.

அரசாங்கத்தின் இந்த முயற்சி பாராட்டுக்குரியது என்றுக் கூறிய குணராஜ், இது 2026 ஆம் ஆண்டுக்கான சிறந்த தொடக்கமாக அமையும் என்றும் குறிப்பிட்டார்.

“2026-ஐ புதியதாக தொடங்குவோம். டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் தலைமையிலான அன்வார் இப்ராஹிமின் தலைமையிலான அரசாங்கத்தில் வழங்கும் நிதியை ஆலயங்களுக்கு பயன்படுத்திக் கொள்வோம். மக்களுக்காக என்ன செய்ய வேண்டும் என்பதையும் சிந்திப்போம்.,“ என்றார் அவர்.

ஆலய மேம்பாட்டிற்கான இந்நிதி, சமுதாய வளர்ச்சிக்கும், மக்களின் தேவையைப் பூர்த்தி செய்யவும் உதவியாக இருக்க வேன்டும் என்ற கருத்தையும் அவர் முன்வைத்தார்.

ஆலயங்களுக்கு மடானி அரசாங்கம் வழங்கிய DHARMA மடானி நிதி குறித்து கருத்துரைக்கையில் அவர் அத்தகவல்களை பெர்னாமா செய்திகளிடம் பகிர்ந்து கொண்டார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)