கோலாலம்பூர், 31 அக்டோபர் (பெர்னாமா)-- பண்டிகைக் காலங்களில் அதன் கொண்டாட்டத்திற்கு மட்டுமே முன்னுரிமை வழங்காமல், அனைத்து தரப்பினருக்கும் பயனளிக்கும் வகையில், மலேசிய வணிக சங்கங்களின் கூட்டமைப்பு, FMBA, கருத்தரங்கு ஒன்றை ஏற்பாடு செய்தது.
நல்லாட்சி, வெளிப்படைத்தன்மை மற்றும் நேர்மை” என்ற கருப்பொருளில் நடைபெற்ற அக்கருத்தரங்கில், சங்கங்களின் பதிவிலாகா, ROS, மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம், SPRM, அரச மலேசிய போலீஸ் படை, PDRM உள்ளிட்ட பல அரசு நிறுவனங்களின் உறுப்பினர்களும் பங்கேற்றனர்.
அரசாங்க நிறுவனங்களுக்கு நல்லாட்சி, வெளிப்படைத்தன்மை மற்றும் நேர்மையின் முக்கியத்துவத்தை எடுத்துரைப்பதே இந்த கருத்தரங்கின் நோக்கம் என்று FMBA உறுப்பினரும், மலேசிய ஆடை வடிவமைப்பு வர்த்தக மேம்பாட்டு சங்கத்தின் தலைவருமான, வி. பீகே நாயர் தெரிவித்தார்.
''நல்லாட்சி, வெளிப்படைத்தன்மை மற்றும் நேர்மை சங்க நிறுவனங்களுக்கு மிக முக்கியம், இந்த மூன்று கூறுகளும் சங்க நிறுவனங்களை வழிநடத்தும் தலைவர்களுக்கு மிக முக்கியம்.'' என்றார் மலேசிய ஆடை வடிவமைப்பு வர்த்தக மேம்பாட்டு சங்கத் தலைவர் வி. பீகே நாயர்.
இதனிடையே, இக்கருத்தரங்கின் பேச்சாளர்களும் தங்களின் கருத்துகளைப் பகிர்ந்து கொண்டனர்.
''இந்த நிகழ்ச்சிக்கு என்னைப் பேச்சாளராக அழைத்துள்ளனர். ஊழல், அதனைத் தடுக்கும் வழிமுறைகள் மற்றும் வெளிப்படைத்தன்மை பற்றிக் கருத்துரைக்கவே நான் இந்நிகழ்க்கிக்கு வந்திருக்கும் நோக்கும்.'' என்றார் மலேசிய ஊழல் தடுப்பு ஆணைய கண்காணிப்பாளர் திலக் முனுசாமி.
சங்கம் என்றால் என்ன, சங்கத்தை சட்ட பூர்வமாக எவ்வாறு நடத்துவது, அதன் முறையான வழிமுறைகளை இங்கு பேசவுள்ள்ளோம் என்றார் மலேசிய வணிக சங்கங்களின் கூட்டமைப்பின் சட்ட ஆலோசகர் ராஜசுந்தரம் பொன்னுசாமி.
அதனைத் தொடர்ந்து, இக்லாஸ் நல அமைப்பு காப்பக மாணவர்களின் நடன படைப்புடன் நடைபெற்ற தீபாவளி கொண்டாட்ட நிகழ்ச்சியில், தேசிய ஒருமைப்பாட்டு துணை அமைச்சர் செனட்டர் சரஸ்வதி கந்தசாமியும் கலந்து சிறப்பித்தார்.
பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)