ஜாலான் பினாங், 31 அக்டோபர் (பெர்னாமா) -- இன்றைய அச்சுறுத்தல்கள் எல்லைகள் மற்றும் பரிமாணங்களைக் கடந்து செல்வதால் வளர்ந்து வரும் பாதுகாப்பு நிலப்பரப்புக்கு ஏற்ப ஆசியான் தற்காப்பு அமைச்சர்கள் தங்களைத் தயார்படுத்திக் கொள்ள வேண்டும்.
அந்த வட்டாரங்கள் எதிர்கொள்ளும் சவால்கள் இனி வட்டார அல்லது கடல்சார் களங்களுடன் மட்டும் நின்றுவிடாது என்று தற்காப்பு அமைச்சர் டத்தோ ஶ்ரீ முஹமட் காலிட் நோர்டின் கூறினார்.
"தென் சீனக் கடலில் உள்ள சவால்களை நாங்கள் காண்கிறோம். ஆனால், நமது இலக்கவியல் உலகமும் சமமான ஆபத்தில் உள்ளது என்பதை நாம் அங்கீகரிக்க வேண்டும். நமது இணைப்புகள் மற்றும் அமைப்புகளைச் சோதிக்கும் அச்சுறுத்தல்கள் கண்ணுக்குத் தெரியாததாக இருக்கலாம். ஆனால், நமது கடல்சார் மண்டலங்களை அச்சுறுத்துவதைப் போலவே ஆபத்தானவை. நிலத்திலோ கடலிலோ இணையத் தளத்திலோ நமது பாதுகாப்பின் எந்தப் பகுதியையும் நாம் இனி புறக்கணிக்க முடியாது," என்று டத்தோ ஶ்ரீ முஹமட் காலிட் நோர்டின் தெரிவித்தார்.
இன்று கோலாலம்பூர் மாநாட்டு மையம் கே.எல்.சி.சியில் 19வது ஆசியான் தற்காப்பு அமைச்சர்கள் கூட்டம் ஆசியான் தற்காப்பு அமைச்சர்கள் கூட்டத்தின் தொடக்க விழாவில் டத்தோ ஶ்ரீ முஹமட் காலிட் அவ்வாறு குறிப்பிட்டார்.
இந்த அச்சுறுத்தல்களுக்கு எதிராக முதலீடு செய்யத் தவறுவது நமது எதிர்காலத்தைப் பாதுகாக்கத் தவறியது போலாகும் என்றும் அவர் எச்சரித்தார்.
--பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)