ஜெர்மன், 30 அக்டோபர் (பெர்னாமா) -- ஜெர்மன் கிண்ண காற்பந்து போட்டியின் இரண்டாவது சுற்றில் பாயர்ன் மூனிக் 4-1 என்ற கோல் எண்ணிக்கையில் கொலோனை வீழ்த்தியது.
இந்த வெற்றியின் வழி, இப்பருவத்தில், அனைத்து போட்டிகளிலும் தோல்வியின்றி தொடர்ந்து 14 ஆட்டங்கள் வெற்றி பெற்ற சாதனையை பாயர்ன் மூனிக் நீட்டித்துள்ளது.
இந்த பருவம் தொடங்கியதிலிருந்து தொடர்ந்து 14 ஆட்டங்களில் வெற்றி பெற்ற முதல் ஐரோப்பிய கிளப்பாக பாயர்ன் மூனிக் உருவெடுத்துள்ளது.
மேலும், 1992-1993-ஆம் ஆண்டிற்கான பருவத்தில் தொடர்ந்து 13 ஆட்டங்களில் வெற்றி பெற்ற ஏ.சி. மிலானின் சாதனையையும் பாயர்ன் முறியடித்துள்ளது.
முதல் பாதி ஆட்டத்தின் 30-வது நிமிடம் வரை பின் தங்கியிருந்த பாயர்ன் அதன் பின்னர் தொடர்ச்சியாக நான்கு கோல்களை அடித்தது.
Cologne-னுக்கு எதிராக அடிக்கப்பட்ட நான்கு கோல்களில், இரண்டு கோல்களை
அவ்வணியின் முன்னணி ஆட்டக்காரர் ஹாரி கேன் போட்டார்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)